Pages

Sunday, November 5, 2017

மஸ்கட்டிலிருந்து இந்தியா வரும் ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு சலுகை ~ 48" டிவி வரை இலவச அனுமதி !

அதிரை நியூஸ்: நவ.05
மஸ்கட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் இலவச கட்டணத்தில் டிவி கொண்டு வரலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

மஸ்கட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் தங்களுடன் 48 இஞ்ச் டிவி சைஸ் வரை லக்கேஜ் கட்டணமின்றி இலவசமாக கொண்டு செல்லலாம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஏர் இந்தியாவின் இந்த சிறப்புச் சலுகை உடனடியாக அமுலுக்க வருவதுடன் அடுத்த உத்தரவு வரும் வரை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இது வழமையான லக்கேஜ் மற்றும் கேபின் பேக்கெஜ் அனுமதிக்கு மேல் வழங்கப்படும் கூடுதல் சிறப்புச் சலுகையாகும். லக்கேஜ் மற்றும் கேபின் பேக்கேஜ்களில் அனுமதிக்கப்பட்ட எடைக்கு மேல் இருந்தால் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதைப்போன்றதொரு அறிவிப்பை ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் ஒருநாள் முன்னதாக அறிவித்திருந்தது. எனினும் இந்திய விமான நிலையங்களில் டிவியின் மீது செலுத்த வேண்டிய வரிகளில் எந்த மாற்றமும் இல்லை.

ஓரிஜினல் பேக்கிங்குடன் கொண்டு வரப்படும் டிவிக்களை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இலவச பேக்பேஜ் சலுகையின் கீழ் கொண்டு வரலாம், இந்த அதிரடி சலுகை மறுஉத்தரவு வரும் வரை நீடிக்கும். மேலும் 40 கிலோ லக்கேஜ் கொண்டு வரவும் ஜெட் ஏர்வேஸ் சலுகையளித்தள்ளது, இந்த சலுகை மட்டும் டிசம்பர் 10 வரை நீடிக்கும்.

தற்போது வளைகுடா விமான நிலையங்களிலிருந்து புறப்படும் போயிங் 737 ரக ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் 40 இஞ்ச் முதல் அதிகபட்சம் 48 இஞ்ச் வரையுள்ள LCD / LED டிவிக்களுக்கு 20 ஓமன் ரியால்களை கட்டணமாக செலுத்த வேண்டும் என்று நடைமுறையில் உள்ளதே சற்று தளர்த்தப்பட்டுள்ளது. 48 இஞ்ச் அளவிற்கு மேலுள்ள டிவிக்களுக்கு அனுமதியில்லை.

Source: Times of Oman
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...