Pages

Tuesday, November 7, 2017

ஷார்ஜாவில் 5 மரண தண்டனை கைதிகளை மீட்ட இந்தியர் !

அதிரை நியூஸ்: நவ.07
ஷார்ஜாவில் 4 பஞ்சாபியர் மற்றும் ஒரு பீஹாரி ஆகியோர் சக இந்தியத் தொழிலாளியான வீரேந்திர சௌகான் என்பவரை 2011 ஆம் ஆண்டு அடித்துக் கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக சிறையிலிருந்தனர்.

'சர்பத் டா பாலா தர்ம அறக்கட்டளை' (Sarbat Da Bhala Charitable Trust) என்ற தர்ம ஸ்தாபன நிறுவனர், தொழிலதிபர் எஸ்.பி. சிங் ஓபராய் என்பவர் கொலையானவரின் குடும்பத்தினருடன் பேசி 'இரத்த ஈட்டுப் பணத்தை' (Blood Money) பெற்றுக் கொண்டு கொலையாளிகளை மன்னிக்கச் செய்தார். அதற்கான ஒப்புதல் கடிதங்களையும் ஷார்ஜா நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

இரத்தப் பணத்திற்கு எதிராக மன்னிக்கப்பட்ட கொலையாளிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டும் விதிக்கப்பட்டது எனினும் அவர்கள் ஏற்கனவே 6 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டதால் அவர்கள் ஐவரும் விரைவில் இந்தியா திரும்பவுள்ளனர்.

எஸ்.பி. சிங் ஓபராய் எற்கனவே 88 மரண தண்டனை குற்றவாளிகளின் சார்பாக இரத்த ஈட்டுப் பணத்தை செலுத்தி அவர்களை மரண தண்டனையிலிருந்து மீட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நல்லுள்ளம் கொண்ட இந்த மனிதருக்கு நேர்வழியும் கிடைக்கட்டும்.

எஸ்.பி. சிங் ஓபராய் குறித்து அறிந்து கொள்ளவும் அவரது அறக்கட்டளையின் இந்திய தொடர்பு முகவரிகளை அறிந்து கொள்ளவும் இந்த லிங்கை சொடுக்கவும்.

http://www.spsinghoberoisarbatdabhala.com/

SARBAT DA BHALA CHARITABLE TRUST (REGD.)
S.P. Singh Oberoi, Managing Trustee
Phone No: 97150-6468095, 97150-4448816-17
(Delhi) +91-98105-33335
(Punjab) +91-98155-88000
Fax office Dir. : +971 4 2611969
Email : spsinghoberoi@gmail.com, spsinghoberoi@yahoo.com

Source: Gulf News (News Xpress)
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...