Pages

Sunday, November 12, 2017

அதிராம்பட்டினத்தில் டிச.6 போராட்டம் நடத்தப்படும்: தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ பேட்டி

அதிராம்பட்டினம், நவ.12
மனிதநேய ஜனநாயகக் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6 அன்று அதிராம்பட்டினத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றார் மனிதநேய ஜனநாயக் கட்சி மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.

மனிதநேய கலாச்சாரப் பேரவை குவைத் மண்டல துணைச் செயலாளர் அதிரை ஏ.எச் பைசல் அகமது திருமணத்தையொட்டி வாழ்த்து தெரிவிக்க  அதிராம்பட்டினம் வருகை தந்த மனிதநேய ஜனநாயக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியது;
'அதிராம்பட்டினத்தில் சிறப்பான வளர்ச்சியை மனிதநேய ஜனநாயக்கட்சி பெற்றுள்ளது. இப்பகுதி பொதுமக்கள் வழங்கிய ஆதரவு கடந்த ஓராண்டுக்கு முன்பாக, அதிராம்பட்டினத்தில் நடந்த ஷரியத் பாதுகாப்பு குறித்த ஆர்ப்பாட்டத்தில் திரண்ட மக்கள் வெள்ளமே அதற்கு சாட்சி. அதன்பின்னர் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி உள்ளோம்.

தஞ்சை மாவட்டம் நிர்வாக ரீதியாக, தஞ்சை மாநகர், தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு என மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6 போராட்டத்தை அதிராம்பட்டினத்தில் நடத்த உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்களும் பெண்களும் திரளாக  கலந்து கொள்ள வேண்டும். இதற்காக மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம்.

அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களின் அடிப்படை தேவைகள் என்ன என்பது குறித்து எங்களிடம் கோரிக்கைகள் வழங்கும் பட்சத்தில், இது தொடர்பாக பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை அணுகி, அவரது தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து அதிராம்பட்டினம் பகுதி தேவைகளை நிவர்த்தி செய்ய மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் பாடுபடுவோம்' என்றார்.

பேட்டியின் போது, மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் கே. ராவூத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், அதிரை பேரூர் பொருளாளர் எச். சாகுல் ஹமீது மற்றும் அக்கட்சியினர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...