Pages

Wednesday, November 8, 2017

தஞ்சையில் நவ.8 கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து, திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என திமுகவினரை, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியதை அடுத்து, திமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமாகிய டி.ஆர் பாலு தலைமையில், தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ, தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, நகர செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம், தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், மாவட்ட துணைச்செயலாளர் கா. அண்ணாதுரை, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் பி.எஸ் அப்துல் ஹமீது, செயலாளர் (வடக்கு) ஆடுதுறை ஷாஜஹான், செயலாளர் ( தெற்கு ) ஜெய்னுல் ஆபிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் அமர்சிங் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகள் தங்களது சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...