Pages

Tuesday, November 14, 2017

ஆஸ்திரேலியாவில் கார் ரேசில் ஈடுபட்ட 8 வயது சிறுமி மரணம்!

அதிரை நியூஸ்: நவ.14
அனிதா போர்டு என்கிற 8 வயது சிறுமி மேற்கு ஆஸ்திரேலியாவில் (Perth) அமைந்துள்ள குவைனனா மோட்டார் பிளக்ஸ் எனப்படும் கார் ரேஸ் மையத்தில் ஜூனியர் பிரிவினருக்காக நடத்தப்படும் 'டிரேக்ஸ்டெர்' (Dragster) அல்லது 'டிரேக் ரேஸ்' (Drag Race) என அழைக்கப்படும் சிறியரக வாகன போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாரா விதமாக ரேஸ் கோர்ஸின் சுற்றுச்சுவரில் மோதி பலத்த காயமடைந்தார்.

மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனிதா அங்கு சிகிச்கை பலனின்றி உயிரிழந்தார். இதுபோல் பெரியவர்கள் செய்யும் காரியத்தை சிறுவர்கள் செய்யும் போது நம்ம ஊர் பக்கம் 'சின்னப் புள்ளைக்கு ஏன் பெரிய அதாபு' என கண்டிப்பதை கேட்டிருப்பீர்கள் அல்லவா, இங்கு பெற்றவர்களே இதுபோன்ற அதாபுகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதால் ஏற்படும் துயரம் இது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...