Pages

Thursday, November 9, 2017

தஞ்சையில் நவ.8 தேசிய எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

தஞ்சாவூர், நவ.09
தஞ்சாவூர் ரயிலடியில் மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக தேசிய எதிர்ப்பு நாளான புதன்கிழமை இடதுசாரி கட்சிகள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 2016, நவம்பர் 8 ஆம் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியிட்ட பிரதமர் மோடி, கருப்புப் பணம், கள்ளப்பணத்தையும், தீவிரவாதத்தையும் ஒழிக்கப் போவதாகவும், பொருளாதாரத்தை உயர்த்துவதாகவும் கூறினார். ஆனால், கருப்புப் பண முதலாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை. கள்ள நோட்டுகள் ஒழிக்கப்படவில்லை. பெரு முதலாளிகளின் கருப்புப் பணம் முழுவதும் நல்ல பணமாக மாறியது. நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தனர். தீவிரவாதம் ஒழிக்கப்படாததுடன், மாறாக தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்தது. உள்நாட்டு உற்பத்தி, விவசாயம், தொழில், சேவை போன்றவற்றில் பெரும் பின்னடவை சந்தித்துள்ளது. ஜி.எஸ்.டி. என்ற பெயரில் இந்திய பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டது ஆகியவற்றைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ஆர். மனோகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் இரா. திருஞானம் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் கோ. நீலமேகம், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலர்கள் மு.அ. பாரதி, முத்து. உத்திராபதி, சி.பி.ஐ.எம்.எல். (விடுதலை) மாவட்டக் குழு உறுப்பினர் டி. கண்ணையன், மாவட்டக் குழு உறுப்பினர் கே. ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...