Pages

Thursday, November 2, 2017

ராஸ் அல் கைமாவில் 95,000 கண்காணிப்பு கேமிராக்கள்!

அதிரை நியூஸ்: நவ.02
அமீரகம் ராஸ் அல் கைமாவில் 95,000 பாதுகாப்பு கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்பட்டது.

அமீரகம் ராஸ் அல் கைமாவின் அனைத்து சாலைகள் மற்றும் முக்கங்களில் சுமார் 95,000 பாதுகாப்பு கேமிராக்கள் (surveillance cameras) நிறுவப்பட்டதன் மூலம் ராஸ் அல் கைமா எமிரேட் முழுமையும் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பல கிரிமினல் குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளதுடன் பல கிரிமினல்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கமான்டர் இன் சீஃப், மேஜர் ஜெனரல் அலி அப்துல்லா பின் அல்வான் அல் நுஐமி தெரிவித்துள்ளார்.

மேலும், 2வது திட்டமாக ராஸ் கைமாவின் அனைத்து உள்நுழைவு மற்றும் வெளியேறும் சாலைகளிலும் கேமிராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து வாகனங்களும் உள்நிழைவது, வெளியேறுவது, வாகன ஒட்டிகளின் படங்கள் என அனைத்தையும் சேமிக்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதன் மூலம் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு விதிமீறல்களில் ஈடுபடும் டிரைவர்கள் சுற்றிவழைக்கப்படுவர். மேலும் இதன் நீட்சியாக ராஸ் அல் கைமாவின் அனைத்து அலுவலகங்கள், வீடுகள், வணிக வளாகங்களிலும் கேமிராக்கள் பொருத்தப்பட்டு ராஸ் அல் கைமா போலீஸ் கண்காணிப்பின் கொண்டுவரப்படும்.

3வது திட்டமாக, அனைத்து வங்கிகளின் கண்காணிப்பு கேமிராக்களும் நேரடியாக காவல்துறையுடன் இணைக்கப்பட்டு 24 மணிநேரமும் வங்கிகள் கண்காணிக்கப்படும். இது தற்போது நடைமுறையிலுள்ள ஆபத்து காலங்களில் இயக்கப்படும் அலாரங்களுக்கு மாற்றாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...