Pages

Wednesday, November 1, 2017

அதிரையில் புதிதாக இணையதளச் சேவை தொடக்கம் !

அதிராம்பட்டினம், நவ. 01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை இப்பகுதியில் வசிக்கும் தன்னார்வல இளைஞர்கள் செய்திகளாக தொகுத்து, அவற்றை சமூக வலைதளங்களில் தினந்தோறும் பதிந்து வருகின்றனர். இவை, இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோரிடம் கொண்டு சேர்த்து உதவுகிறது. பொது நலச்சேவையில் ஈடுபடும் அதிக ஆர்வத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. மேலும், சமூக மேம்பாடு, கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உதவி, சமூக விழிப்புணர்வு, அரசியல், ஆரோக்கியம், மருத்துவம், விளையாட்டு போன்றவற்றில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இச்சேவையில் ஈடுபடும் இளைஞர்கள் மத்தியில் முழுக்க, முழுக்க பொதுநலம், சமூக மேம்பாடு, ஊடகத் துறையில் கால்பதிக்கும் ஆர்வம் ஆகியவை மேலோங்கிக் காணப்படும்.

சரி விசயத்திற்கு வருவோம்...
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது முகைதீன். இவரது மகன் அஜாருதீன் (23). நெட்வொர்கிங் இன்ஜினியர். இப்பகுதி தன்னார்வல இளைஞர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் அன்றாட செய்திகளை இணையதளம் மூலம் வழங்குவதற்காக புதிதாக 'அதிரை மீடியா' ('www.adiraimedia.in') என்ற இணையதளச் சேவையை இன்று நவ.1 ந் தேதி புதன்கிழமை முதல் தொடங்கி உள்ளார். இத்தளத்தில், சமூகத்தில் நிகழும் அன்றாடச் செய்திகள், அறிவிப்புகள், பொதுமக்கள் ~ தலைவர்கள் கோரிக்கைகள், நேர்காணல்கள், மருத்துவக் குறிப்புகள், சமூக வரலாறு, வேலை வாய்ப்பு செய்திகள், தொழில்நுட்பம், நேரடி லைவ் போன்றவற்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சேவையில் ஈடுபடும் தன்னார்வல இளைஞர்கள் அனைவருக்கும் எமது நன்றி ! இச்சேவையை தொய்வின்றி வெற்றிகரமாக நடத்திட வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்...

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...