Pages

Sunday, November 5, 2017

துபையில் மு.க ஸ்டாலினுடன் அதிரையர்கள் சந்திப்பு (படங்கள்)

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜா மாகாணத்தில் நடந்து வரும் 36 வது சர்வதேச புத்தக கண்காட்சிக்கு ஷார்ஜா ஷேக்கின் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக வருகைதந்த திமுக செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை, அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் அமீரகக் கிளை (SHISWA) நிர்வாகிகள் சார்பில் கே.ஷஃபீக், என்.ஜமாலுதீன், எஃப்.இப்ராஹிம், ஃபைஸல் ஆகியோர் சந்தித்து ஊர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்.

நீர்நிலை மேம்பாடு, வடிகால் வசதிகள், மேல்நிலை தண்ணீர் தொட்டி மற்றும் சுகாதாரம் சார்ந்த விடயங்களை மு.க. ஸ்டாலின் அவர்களிடம் எடுத்துச் சொல்லி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும்படி விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பரிந்துரைப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

இச்சந்திப்பிற்கான ஏற்பாடுகளை சென்னை ஃப்ரெஸ்கோ சூப்பர் மார்க்கெட்  அதிரை ஏ.எஸ்.எம் சாகுல் ஹமீது அவர்கள் செய்திருந்தார்.

செய்தி மற்றும் படங்கள்:
என். ஜமாலுதீன், அமீரகம்
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...