Pages

Wednesday, November 8, 2017

துபையில் ரத்ததான முகாம் (படங்கள்)

துபாய் : துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் சார்பில் ரத்ததான முகாம் 03.11.2017 வெள்ளிக்கிழமை காலை அல் நக்தா பகுதியில் அமைந்துள்ள டேலண்ட் ஜோனில் நடந்தது. துபாய் சுகாதார ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் துபாய் ரத்ததான மையம், டேலண்ட் ஜோன் கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது.

துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா வழிகாட்டுதலின் பேரில் இந்த ரத்ததான முகாமுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. துணைத் தலைவர் அல்ஹாஜ் முஹம்மது மஹ்ரூப் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின் வரவேற்றார்.

இந்த முகாமில் 60-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.
வர்த்தக பிரமுகர் அன்வர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ரத்ததான செய்தவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ரத்ததான முகாமுக்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், டேலண்ட் ஜோன் கல்வி நிறுவன மேலாண்மை இயக்குநர் சான்யோ உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

முகாம் சிறப்புடன் நடைபெற ஈமான் கலாச்சார மையத்தின் செயற்குழு உறுப்பினர் கவுசர், மதுரை அக்மல், கம்பல் தினேஷ், டேலண்ட் ஜோன் ஊழியர்கள்  உள்ளிட்ட குழுவினர் உதவியாக இருந்தனர்.
ரத்ததான முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்றவர்களுக்கு துபாய் ரத்ததான மைய அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...