Pages

Wednesday, November 8, 2017

மழையால் மரம் வேரோடு சாய்ந்தது (படம்)

அதிராம்பட்டினம், நவ.08
கடந்த சில நாட்களாக தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அதிராம்பட்டினம், அடுத்துள்ள பள்ளிக்கொண்டான் லாரல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அருகே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலையோர பழமையான மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், சில நிமிஷங்கள் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை சாலையில் வாகன போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அரசுத்துறையினர் விரைந்து வந்து மரத்தை சாலையிலிருந்து முழுவதுமாக அப்புறப்படுத்தினர். இதனால், போக்குவரத்து சில நிமிடங்களிலேயே சீர் செய்யப்பட்டன. இந்த சாலை வழியே செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...