Pages

Wednesday, November 8, 2017

கராத்தே போட்டியில் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் !

அதிராம்பட்டினம், நவ.08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்றனர்.

தஞ்சாவூர் டெல்டா ரோட்டரி சங்கம், தண்டர் விளையாட்டுக் கழகம் மற்றும் சிட்டோ-ரியு கராத்தே டூ இந்தியா இணைந்து நடத்திய 12 ம் ஆண்டு ஓப்பன் கராத்தே போட்டி, கடந்த அக். 28 ந் தேதி தஞ்சாவூர் குரு தயாள் சர்மா திருமண அரங்கில் நடைபெற்றது.

மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில், பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி என்.சிம்லா தேவி கட்டா பிரிவில் முதல் பரிசும், மூன்றாம் வகுப்பு மாணவன் நிகிலேஷ் சண்டை பிரிவில் முதல் பரிசும், நான்காம்  வகுப்பு மாணவன் நிகிலேஷ்வரன் சண்டை பிரிவில் மூன்றாம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவர்கள் மற்றும் கராத்தே பயிற்சியாளர் என்.நாடிமுத்து ஆகியோரை பள்ளித் தாளாளர்  வீ.சுப்ரமணியன், முதல்வர் ஆர். ஈஸ்வரன், மேலாளர் எஸ். சுப்பையன் மற்றும் ஆசிரியர்கள் இன்று (நவ.08) புதன்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...