Pages

Thursday, November 2, 2017

அதிரையில் கல்லூரி முக்கம் அருகே ஆவின் பாலகம் அமைக்க எதிர்ப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை கல்லூரி முக்கம் அருகில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால் பகுதியில் ஆவின் பாலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு.

சமூக ஆர்வலர்கள் ஹனீ சேக், பாவா பகுருதீன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:  
அதிரை ஈசிஆர் சாலையில் தனியார் கல்லூரி முக்கம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால் அமைந்துள்ளது. மழை காலங்களில் ஏரியிலிருந்து வரும் உபரி நீர் மற்றும் அதிரை, ஏரிப்புறக்கரை ஆகிய பகுதியிலிருந்து வரும் மழை நீர், கழிவு நீர் ஆகியவையும் இந்த வாய்க்கால் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது.

ஏற்கெனவே, இந்த வாய்க்கால் அருகிலுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தனியார் உணவு விடுதி, மீன் விற்பனைக் கடை ஆகியவை சுகாதாரச் சீர்க்கேட்டை ஏற்படுத்தியதால் அவற்றை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் கடந்த ஆண்டு ஜேசிபி இயந்திரம் உதவியோடு அந்தக் கடைகள் அரசால் முற்றிலுமாக அகற்றப்பட்டன.

இந்நிலையில், ஆவின் பாலகம் அமைக்கப் போவதாகக் கூறி இரும்பால் செய்யப்பட்ட ரெடிமேட் பெட்டிக்கடையை சிலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாய்க்கால் பகுதியில் கொண்டு வந்து வைத்துள்ளனர்.

ஏற்கெனவே, பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அரசால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட அதே இடத்தில் தற்போது ஆவின் பாலகம் அமைப்பது தவறானது.

எனவே, வாய்க்காலை ஆக்கிரமித்து ஆவின் பாலகம் அமைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இப்பகுதி பொதுமக்களைத் திரட்டி பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் முற்றுகைப்  போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...