Pages

Tuesday, November 7, 2017

சவுதியில் உறவினர்களுக்கான ரெஸிடென்ஸ் விசா தீர்வை கட்டணம் குறித்து பரவும் வதந்திக்கு மறுப்பு !

அதிரை நியூஸ்: நவ.07
உறவினர் விசா தீர்வை கட்டணத்தில் மாற்றம் என்று வெளியான செய்தியை சவுதி நிதி அமைச்சகம் மறுத்தது.

சவுதி அரேபியாவில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடன் மனைவி, பிள்ளைகள் போன்ற குடும்ப உறவுகளை தங்களுடன் ரெஸிடென்ஸ் விசாவில் தங்க வைத்திருக்க தலைக்கு தலா 100 ரியால் என தீர்வை வசூலிக்கப்பட்டு வருவது அறிந்ததே.

இந்த தீர்வை வரியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து 'தீர்வையில் எத்தகைய மாற்றங்களும் செய்யப்படவில்லை, இது குறித்து பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் நம்பத்தகுந்தவை அல்ல என சவுதி அரேபியாவின் நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், இதுபோன்ற தகவல்களை பரப்புமுன் நிதி அமைச்சகத்தை தொடர்பு கொண்டு உண்மை நிலையை தெரிந்து கொண்டபின் தான் செய்திகளை வெளியிட வேண்டும் என ஊடகங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...