Pages

Friday, November 3, 2017

அதிராம்பட்டினத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ~ முழு விவரம்

அதிராம்பட்டினம், நவ.03
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கரையூர் தெரு கடற்கரையை ஒட்டிய பகுதியிலுள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் இயற்கைப் பேரிடரை எதிர்கொள்வது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

இதில், காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை,  மருத்துவத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் வாரியத்துறை உள்ளிட்ட பல்வேறுத்துறை உயர் அதிகாரிகள், மீனவ மக்கள் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறியது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் வெள்ளிக்கிழமை காலை கடற்கரைப் பகுதிகளை பார்வையிட்டோம். பின்னர், அதிரை கரையூர் தெரு பகுதியிலுள்ள மீனவ மக்களைச் சந்தித்து இயற்கைப் பேரிடரை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கலந்தாலோசனை நடத்தினோம்.

காவல்துறையைப் பொறுத்தவரை மாநில இயற்கை பேரிடர் தடுப்புப் பயிற்சி பெற்ற காவலர்கள் 70 பேர் உள்ளனர். இவர்கள் 3 குழுவாகப் பிரிக்கப்பட்டு சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம் கடற்கரைப் பகுதிகளில் தலா 1 குழுவும், தஞ்சை காவிரிக் கரையில் 1 குழுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர் நவீனக் கருவிகளுடன் பயிற்சி பெற்றவர்கள். கடல் சீற்றம், கட்டட இடிபாடு, மரம் முறிந்து விழுதல் போன்ற இயற்கை பாதிப்புகளில்  இருந்து மக்களை மீட்டெடுத்து அருகிலுள்ள பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வரும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக கிராமப் பகுதி மீனவர்கள், நீச்சல் வீரர்கள் ஆகியோரும் தயார் நிலையில் உள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை மக்கள் எந்த நேரத்திலும் 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இங்கு தகவல்
கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதிப்புக்குள்ளான மக்களை விரைவாக மீட்டெடுத்து பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு செல்ல  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

பேட்டியின்போது பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் ஆர்.கோவிந்தராசு, டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...