Pages

Monday, November 6, 2017

தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் பிலால் நகர் இளைஞர்கள் (படங்கள்)

 
அதிராம்பட்டினம், நவ.06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பிரதான சாலைகளில் கடந்த 7 தினங்களாக தேங்கியுள்ள மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இச்சாலை முழுவதும் சேரும் சகதியாக இருப்பதால், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வாகனங்கள் சாலையில் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆதலால் சம்பந்தபட்ட ஏரிப்புறக்கரை ஊராட்சி நிர்வாகம்  சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டுமென இப்பகுதியினரின் கோரிக்கை தினமணி நாளிதழ் செய்தியில் இன்று திங்கட்கிழமை பிரசுரமாகியது.

இந்நிலையில், இப்பகுதி தன்னார்வல இளைஞர்கள் தானாக முன்வந்து பிலால்நகர் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் இன்று திங்கட்கிழமை காலை தீவிரமாக ஈடுபட்டனர்.
 

1 comment:

  1. இந்த இளைஞர்களுக்கும் இவர்களைப் போல் சமூகப்பணிகளில் ஈடுபடும் அனைத்து அதிரை இளைஞர்களுக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...