Pages

Friday, November 24, 2017

அதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.24
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.எம் அப்துல் காதர், அதிரை பேரூர் செயலர் வழக்கறிஞர் அப்துல் முனாப், பொருளாளர் ஏ. சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் கலந்துகொண்டு பேசியது;
பூனை குட்டி வெளியே வந்து விட்டது. அனைவரும் எதிர்பார்த்த படியே  இரட்டை இலை சின்னத்தை இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிக்கு வழங்கியதன் மூலம், எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் பி.ஜெ.பி - அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் தெளிவாக உள்ளனர். திராவிட பாரம்பரியத்திற்கு சொந்தமான இந்த மண்ணில் பி.ஜெ.பி காலுன்ற அனுமதிக்க மாட்டார்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனார் எழுதிய பாடலின் முதல் வரிப்படி அனைத்தும் சமம் என்ற கொள்கை தான் இங்கு எடுபடும். பலதரப்பட்ட கொள்கைகள் இங்கு எடுபடாது. தற்போது பி.ஜெ.பி அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை பி.ஜெ.பி கட்சி பூஜியம்தான். 

சென்னை, ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் எங்களது கூட்டணி கட்சியான திமுக வேட்பாளரை ஆதரித்து, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம்' என்றார்.

கூட்டத்தில், அதிராம்பட்டினம் நீர் நிலை ஆதாரமாக இருக்கும் கரிசமணி ஏரியின் ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றி தூர் வார வேண்டும். அதிராம்பட்டினம், வண்டிப்பேட்டை அருகில் உள்ள ஆலடிக்குளம் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, வாய்க்காலை தூர் வார வேண்டும். மந்தமாக நடைபெறும் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப்பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கட்சியில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ. சாகுல் ஹமீது வரவேற்றுப் பேசினார். முடிவில் மாவட்ட பிரதிநிதி ஜமால் முகமது நன்றி கூறினார். இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பின் பேரில், மதுக்கூர் பேரூர் தலைவர் என்.எம் அப்துல் அஜீஸ், செயலர் எஸ். முஸ்தபா, பொருளாளர் சேக் அலாவுதீன், அதிரை பேரூர் துணைச் செயலர் அபு பக்கர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...