Pages

Sunday, November 5, 2017

அதிராம்பட்டினம் அருகே மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள நரசிங்கபுரம், தம்பிக்கோட்டை ஆகிய கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பட்டுக்கோட்டை வட்டம், நரசிங்கபுரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர், பேரிடர் காலத்தில் பாதிப்புக்குள்ளாகும் மக்களை தங்க வைப்பதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். அவசர காலங்களில் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதையும், கால்நடைகளை தங்க வைப்பதற்கு தேவையான வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.

பின்னர், தம்பிக்கோட்டை வடகாடு ஊராட்சியில் கடல் முகத்துவாரத்தில் வெள்ள நீர் வடியும் இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, வட்டாட்சியர் ரகுராமன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...