Pages

Thursday, November 2, 2017

விண்வெளிக்கு சென்றுவரும் எலி, மீன், கொசு, நத்தை

அதிரை நியூஸ்: நவ. 02
60 ஆண்டுகளுக்கு முன் 1957 ஆம் ஆண்டு இதே நவம்பர் மாதம் 3 ஆம் தேதி 'லைகா' என்று பெயரிடப்பட்ட நாய் ஒன்று ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் 2' என்ற விண்கலத்தில் முதன்முதலாக விண்வெளி ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரினமாகும்.

இதனைத் தொடர்ந்து சிம்பன்ஸி குரங்குகள், பழ வண்டுகள், கினியா பன்றிகள், எலி, முயல், தவளை மற்றும் ஊர்வன என மினி மிருகக்காட்சி சாலையே விண்வெளிக்கு அனுப்பப்பட்டு சோதனைகள் செய்யப்பட்டன இன்னும் செய்யப்பட்டு வருகின்றன.

சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்தின் தலைமை விஞ்ஞானி ஜூலி ராபின்சன் என்பவர் கூறியதாவது, தற்போதும் மீன்கள், ஈக்கள், நத்தைகள், எலிகள் போன்ற சிறிய பிராணிகள் அதிகளவில் அனுப்பப்பட்டு வருவதாகவும், இத்தகைய மிருகங்களுக்கும் தேவையான பயிற்சிகள் விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படுவது போன்றே மிகுந்த கவனமுடன் வழங்கப்படுவதாகவும், இதில் மீன்கள் விண்வெளியில் நிலவும் சூழலுக்கு ஏற்ப வாழும் தன்மையை விரைவில் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

சில மிருகங்கள் மனஅழுத்தங்களுக்கும் உள்ளாகின்றதாம். சில மிருகங்கள் விண்வெளி வீரர்களைப் போல் விண்வெளியில் நீந்தவும் செய்கின்றன என்றும் தெரிவித்ததுடன் மனிதகுலத்தின் நன்மைக்காக மிருகங்களை வைத்து செய்யப்படும் ஆராய்ச்சிகள் தொடர்வதாகவும் தெரிவித்தார்.

Source: AFP / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...