Pages

Monday, November 6, 2017

புகை பிடிக்காத ஊழியர்களுக்கு ஜப்பான் நிறுவனம் வழங்கும் அசத்தல் வாய்ப்பு !

அதிரை நியூஸ்: நவ.06
மெல்லக்கொல்லும் விஷமான புகைபிடித்தல் இன்று ஓர் ஆலங்கார, ஆடம்பரச் செயலாக சகட்டுமேனிக்கு பரவியுள்ளது, அதிலும் இக்கொடிய பழக்கத்திற்கு பிஞ்சிலேயே கெட்டுப்போகும் சிறார்கள் ஏராளம். இன்னொரு பக்கம் மிக ஈனஸ்வரத்தில் புகைக்கு எதிரான விழிப்புணர்வுகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன என்றாலும் அவற்றை வரவேற்போம்.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் செயல்படும் வர்த்தக விளம்பர நிறுவனம் பியாலா (Piala). இங்கு பணியாற்றும் ஊழியர்களில் புகைப்பழக்கம் இல்லாதவர்களை ஊக்குவிக்கும் வகையில் 6 நாட்களை கூடுதலாக விடுமுறை நாட்களாக வழங்கி உத்வேகப்படுத்தியுள்ளது. அந்நிறுவனத்தில் பணியாற்றும் 3 ல் 2 மடங்கு ஊழியர்கள்  அதாவது சுமார் 120 பேர் புகை பழக்கமில்லாதவர்கள், அதன் பெருநிறுவன திட்டமிடல் இயக்குனர் ஹிரோதகா மட்சூஷிமா உட்பட.

பொதுவாக புகைப்பழக்கம் உள்ளவர்கள் வேலை நேரத்தின் போது புகைப்பதற்காக அடிக்கடி அதிகாரபூர்வமற்ற இடைவேளையை எடுத்துக் கொள்வார்கள். அதேவேளை புகை பழக்கமில்லாதவர்கள் தங்கள் கடன் பணி செய்து கிடப்பதே என வேலையில் முழ்கியிருப்பர். புகைப்பிடிப்பவர்கள் எடுத்துக் கொள்ளும் இடைவேளையை கணக்கிட்டு புகை பிடிக்காதாவர்களுக்கு 6 நாட்களை கூடுதல் விடுமுறையாக வழங்கி இடைவேளையை சமன் செய்துள்ளார் ஹிரோதகா மட்சூஷிமா.

பொதுவாக ஜப்பானிய நிறுவனங்கள் புகைபிடிப்பவர்களுக்கு என புகைத்தலுக்கான தனியிடங்களை ஒதுக்கி வைத்துள்ளன. அதேபோல் பொதுவெளியில் புகைப்பிடிப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்ற போதும் 20 வயது இளைஞர்கள் 20 சதவீதம் போரும், 30 வயதினர் 40 சதவிகிதமும் புகைக்கு அடிமையாகியுள்ளனர் என்றபோதும் 2001 ஆம் ஆண்டின் ஜப்பானிய அரசு புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில் புகைப்பவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை சரிபாதியாக குறைந்துள்ளது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

சிகரெட்டுகளில் என்னென்ன விஷங்கள் உள்ளன என்பதை அறிய இந்த சுட்டிக்குள் சென்று பார்க்கவும்:

https://www.allianz.com.au/life-insurance/news/poisons-in-a-cigarette

(மெல்ல கொல்லும் விஷம் மூலம்) தற்கொலை செய்து கொள்பவர்கள் குறித்து இஸ்லாமிய எச்சரிக்கைகள் அறிவுடைய மக்களுக்கு இன்ஷா அல்லாஹ் பலனளிக்கும்.

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 2:195)

அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)' என்று கூறினார்கள். (ஆதாரம் ஸஹீஹ் அல் புஹாரி 2653) Volume :3 Book :52

5778. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலைசெய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஆதாரம் ஸஹீஹ் அல் புஹாரி 5778) Volume :6 Book :76

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழவைக்கவில்லை.  (ஆதாரம் ஸஹீஹ் அல் முஸ்லீம் 1779) Book :11

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...