Pages

Monday, November 20, 2017

ஆஸ்திரேலியா அருகே கடலுக்குள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !

அதிரை நியூஸ்: நவ.20
ஆஸ்திரேலியா அருகே கடலுக்குள் சக்திவாய்ந்த நிலநடுக்கம் அருகாமை தீவுகளுக்கு மட்டும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு மேற்கே, நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு வடக்கே, சாலமன் தீவுகளுக்கு தெற்கே, பிஜி தீவுகளுக்கு கிழக்கே என இவற்றிற்கு மத்தியில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது 'நியூ காலிடோனியா (New Caledonia) மற்றும் வனட்டு தீவுகள்' (Vanuatu).

நியூ காலிடோனியாவிலிருந்து சுமார் 80 கி.மீ தூரத்தில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இன்று அதிகாலையில் ரிக்டர் அளவை 7.3 மேக்னிடியூட்  அளவில் ஏற்பட்ட சக்திவாய்நத நிலநடுக்கத்தால் சுமார் 300 கி.மீ சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்பு பல பகுதிகளிலிருந்தும் வாபஸ் பெறப்பட்டது.

அருகாமை தீவுகளான நியூ காலிடோனியா மற்றும் வனட்டு தீவுகள் மட்டுமே சுமார் 1 மீட்டர் (3.3 அடி) உயரமுள்ள சுனாமி அலைகளால் தாக்கப்படும் என்றும், இந்த பேரலைகள் வழியிலுள்ள பவழப்பாறைகளை கடந்து வரும் போது இதன் வேகம் மட்டுப்படவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவை கரைகளை அடையும் போது அதன் தாக்கங்கள் அனைத்து பகுதியிலும் ஒன்று போல இருக்காது.

ஆக! சுனாமி எப்ப வரும்? எப்படி வரும் என்பதையெல்லாம் படைத்த இறைவன் மட்டுமே மிகத்தீர்க்கமாக அறிவான்.

உண்மையில் நில நடுக்கங்கள் உலுக்குகின்றதோ இல்லையோ சகட்டுமேனிக்கு பகிரப்படும் வதந்திகளால் சமூக ஊடகங்கள் நித்தமும் பலமுறை அதிர்வதென்னவோ உண்மையிலும் உண்மை. கடந்த வாரத்தில் அள்ளிவிடப்பட்ட 'சற்றுமுன்' இலங்கையில் சுனாமி, இந்தோனேஷியாவில் சுனாமி, இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சுனாமி டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ரிலீஸ் என்ற செய்திகள் மட்டும் இன்னும் ஓயவில்லை.

இந்த அவசர கதி வதந்தியாளர்கள் குறித்து இஸ்லாம் கீழ்வருமாறு எச்சரிக்கின்றது.

பொய்யனுக்கு இலக்கணம் என்ன?
حفص بن عاصم رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم: ' كفى بالمرء كذباأن يحدّث بكل ما سـمع ' (رواه مسلم)
ஹப்ஸ் பின் ஆஸிம் (ரலி) அறிவிக்கிறார்கள்: கேள்விப்படுவதை எல்லாம் எடுத்துச் சொல்பவன் பொய்யன் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்-6)

அல்லாஹ் நேசிப்பதும் வெறுப்பதும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு மூன்று குணங்களை விரும்புகிறான், மூன்று குணங்களை வெறுக்கிறான். உங்களிடம் அவன் விரும்பும் மூன்று குணங்கள்:

1. அவனையே நீங்கள் வணங்க வேண்டும் 2. அவனுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது 3. நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும், நீங்கள் பிரிந்துவிடக் கூடாது.

அல்லாஹ் உங்களிடம் வெறுக்கும் மூன்று குணங்கள்: 1. 'அவர் சொன்னார். (இவ்வாறு) சொல்லப்பட்டது' என்பது போன்ற வதந்திகளில் ஈடுபடுவது 2. அதிகமாக கேள்விகள் கேட்பது 3. செல்வத்தை வீணடிப்பது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

வீண் வதந்திகளை பரப்பவும் வேண்டாம்! நம்பவும் வேண்டாம்!!
வதந்தியை நம்புபவர், அதைப் பரப்புபவர் பற்றி நபி (ஸல்) அவர்களின் தெளிவான தீர்ப்பைப் பாருங்கள்.

'பிறர் மீது கெட்ட எண்ணம் கொள்வது குறித்தும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் கெட்ட எண்ணம் தான் பேச்சுக்களிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர்களாய் இருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5143)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...