Pages

Wednesday, November 8, 2017

பிலால் நகரில் தூய்மைப் பணியும் ~ தன்னார்வல இளைஞர்களின் கோரிக்கையும் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில் பெய்த தொடர் மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் இருந்தது. மேலும், இப்பகுதிகளில் அன்றாடம் சேகரமாகும் குப்பை கழிவுகள் அள்ளப்படமால் துர்நாற்றம் வீசியது. தொடர் மழையால் பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளித்தது.

இந்நிலையில், இப்பகுதியில் வசிக்கும் தன்னார்வல இளைஞர்கள் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று (நவ.08) செவ்வாய்க்கிழமை திரண்டு சென்று, அங்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனுவை  அளித்தனர்.

இதையடுத்து, இன்று ( நவ.08) புதன்கிழமை காலை வட்டார  வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) தவமணி தலைமையில், ஏரிப்புறக்கரை ஊராட்சி செயல் அலுவலர் கலா மேற்பார்வையில், ஊராட்சி தூய்மை காவலர்கள் 13 பேர் பிலால் நகர் பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது, தன்னார்வல இளைஞர்கள் இப்பகுதியில் புதிதாக குப்பைத் தொட்டிகள் அமைக்கவும், இப்பகுதி செடியன் குளம் தென்கரை முதல் ஈஸ்ட்கோஸ்ட் சாலை வரை புதிதாக மழைநீர் வடிகால் வசதியும், பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தரவும், இப்பகுதி பொதுமக்கள் பிலால் நகர் இணைப்பில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் சாலையை கடந்து செல்ல புதிதாக நடை பாலம் அமைத்து தரவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...