Pages

Tuesday, November 7, 2017

பண மதிப்பிழப்பு வெற்றியா? 'அரசியல் விமர்சகர்' அதிரை பாருக் அலசல்!

அதிரை பாருக்
அதிராம்பட்டினம், நவ.07
2016 நவம்பர் 08 அன்று நள்ளிரவில் டெல்லியில் திடீரென ஒரு புயல் உருவானது. அந்த புயலின் தாக்கம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. நாட்டில் பெரும்பாலான மக்கள் அந்த பொருளாதார புயல் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை. நவம்பர் 08 நள்ளிரவு முதல் 500ம் 1000 மும் செல்லாது எனவும் அவை இனி வெறும் காகிதம் தான் என மாண்புமிகு பிரதமர் மோடி (Hon'ble Prime Minister Narendra Modi ) அறிவித்ததை நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லி  (Hon'ble Finance Minister Arun Jaitley )யும் இதை ஆதரித்தார்.

இந்த வெறும் காதிதத்தை தூக்கிக் கொண்டு கோடிக்கணக்கான மக்கள் வங்கிகளுக்கு படையெடுத்ததும் வரிசையில் நின்றவர்கள் பலர் பல மாநிலங்களில் உயிர் இழந்ததும் உலகறிந்த செய்திகள். ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. ரகுராம் கோவிந்த ராஜன் (RBI Governor Shri.Raghuram Govind Rajan – 04.09. 2013 முதல் 04.09.2016 வரை பொறுப்பு வகித்தவர்) பதவிக்கு பிறகு பொறுப்பேற்ற திரு. உர்ஜித் படேல் (Urjit Patel) இந்த திட்டத்தை முழு மனதுடன் ஆதரித்தாரா என்று பலருக்கும் புரியவில்லை. முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சில மாதங்களுக்கு முன் ஆங்கில தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் (former RBI governor shri. Y.V.Reddy - Y.V.ரெட்டி) 1000 ரூபாயை செல்லாது என்றார்கள் ஆனால் 500 ரூபாயை ஏன் செல்லாது என அறிவித்தார்கள் என பல கேள்விகளை எழுப்பினார். இது தொடர்பாக எதிர்கட்சிகள் எல்லாம் கேள்விகள் கேட்டபோது கொள்கை முடிவு மற்றும் இரகசியம் என்பதே பதிலாக சொல்லப்பட்டது.பண மதிப்பிழப்பு செய்தி வெளியானவுடன் சில கட்சி தலைவர்களும் சில நடிகர்களும் அவசர கதியில் இதை ஆதரித்து செய்தி வெளியிட்டனர்.

13.11.2016 அன்று “அவசர அறிவிப்பும் அவதிக்குள்ளான மக்களும்“ என்ற தலைப்பில் நான் வெளியிட்ட விமர்சனம் 'அதிரை நியூஸ்' வாயிலாக உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்களை சென்றடைந்தது. அப்போது இப்படி விமர்சித்துவிட்டு பண மதிப்பிழப்பு வெற்றி என்று இப்போது சொல்கிறாரே என்ற கேள்விகள் உங்களுக்கு வரும் இதை தொடர்ந்து படிக்கும் போது தலைப்புக்கான சரியான விளக்கத்தை புரிந்து கொள்வீர்கள். இதோ அந்த விளக்கங்கள் பண மதிப்பிழப்பை ஆதரித்த பலரும் 13ம்  தேதிக்கு பிறகு தங்களது கருத்தை மாற்றிக் கொண்டார்கள். செல்லாது என பிரதமரால் அறிவிக்கப்பட்ட ரூபாய் 500ம் 1000மும் பல ஊர்களில் தீயிட்டு கொளுத்தப்பட்டன காரணம் பணம் தன் மதிப்பை இழந்துவிட்டது. பல இடங்களில் துண்டுதுண்டாக வெட்டி சாலை ஓரங்களில் வீசப்பட்டன காரணம் பணம் தன் மதிப்பை இழந்துவிட்டது. மேலும் பல ஊர்களில் செல்லாது  என அறிவிக்கப்பட்ட இந்த நோட்டுக்களை மூட்டை கட்டி கால்வாய்களில் வீசினார்கள் காரணம் பணம் தன் மதிப்பை இழந்துதான். எல்லாவற்றிக்கும் மேலாக பணத்தின் மதிப்பு சினிமா டிக்கெட்டுக்களை விட (சில இடங்களில் கூடுதலான விலைக்கு வெளியில் விற்பது) மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது தான் வேதனையான செய்தி.  30 ரூபாய் டிக்கெட் 50 ரூபாய், 50 ரூபாய் டிக்கெட் 100 ரூபாய் , 100 ரூபாய் டிக்கெட் 200 ரூபாய் அல்லது இதற்கும் மேல் விற்பதாக செய்திகளில் கண்டிருக்கின்றோம். ரிசர்வ் வங்கி கவர்னர் என்ன சொல்லி ரூபாய் நோட்டில் கையெழுத்திட்டுள்ளார். உதாரணமாக 500 ரூபாயை கவனிப்போம்

I PROMISE TO PAY THE BEARER THE SUM FIVE HUNDRED RUPEES – GOVERNOR
இதை வைத்திருப்பவருக்கு ரூபாய் ஐநூறு வழங்க நான் உறுதியளிக்கின்றேன் – கவர்னர். ஆனால் 09.11.2016 முதல் அடுத்த பல மாதங்களுக்கு நிலைமை என்ன ஆனது?

500க்கு 300, 1000க்கு 700 எனவும் இதைவிடவும் குறைவாகவும் நோட்டின் மதிப்பை குறைத்து எராளனமானோர் கமிஷனுக்கு மாற்றிக் கொடுத்ததாகவும் அடிக்கடி செய்திகள் வெளியாயின. காரணம் பிரதமர் சொன்னபடி பணம் தன் மதிப்பை இழந்துவிட்டது. என்னுடைய பொருளாதார கணக்குப்படி பண மதிப்பிழப்பு (DEMONETISATION) என்பதற்கு இப்படித்தான் விளக்கம் சொல்ல முடியும். 13.11.2016 நான் வெளியிட்ட செய்திகளில் இதன் பலன்கள் தெரிய ஆறு மாதங்களுக்கு மேல் ஆகலாம் என குறிப்பிட்டிருந்தேன்.

நன்மை, தீமை – லாபம் அல்லது நஷ்டம் – வெற்றி அல்லது தோல்வி என்பதை தான் பலன் என்கிறோம். ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. என்ன பலன் என்பதை 130 கோடி மக்களும் பார்த்துக் கொண்டிருகிறார்கள். பணக்காரர்களுக்கு எல்லாம் தூக்கம் போய்விட்டது என்பதாக பிரதமர் கூறினார். ஆனால், உண்மையில் ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் தான் இந்த திடீர் அறிவிப்பால் பல நாட்களுக்கு தூக்கம் கெட்டது. அரசுக்கு வரி செலுத்துவது யார்? பணக்காரர்கள் தான்! என்பது உலகறிந்த விஷயம். ஒரு கோடி பேர் மட்டுமே வரி செலுத்துவதாக கவலைப்பட்ட அரசு இதை பத்து கோடியாக மாற்ற தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் நாட்டில் பொருளாதாரம் 6 சதவீதத்திற்கும் கீழ் சரிந்திருக்காது.

2019 மார்ச் மாதத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் 7.5 க்கும் 8 க்கும் இடையில் வருமா என்பது சந்தேகத்திற்கு இடமானதாகவே உள்ளது. 100 பேர் மரணம் அடைந்த பிறகுதான் நாட்டின் பொருளாதாரம் சரியாகும், கருப்பு பணம் ஒழியும் என்றிருந்தால் அந்த பொருளாதாரமே நமக்கு தேவை இல்லாதது. பணத்தை மாற்றுவதற்காக மரணம் அடைந்தவர்களின் உயிர் பொருளாதரத்தை விட மேலானது. வேலை வாய்ப்புகளை குறைக்கக்கூடியாய விலை வாசியை உயர்த்தக்கூடிய எந்த பொருளாதார திட்டங்களும் (முரண்பட்ட GST உள்பட) இந்த நாட்டிற்கு எந்த காலத்திற்கும் ஒத்துவராது என்பது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் புரியவரும்.

நீண்டகால நோய்க்கு (அதாவது கறுப்புப்பணம் – Black Money) கசப்பு மருந்து கொடுத்திருப்பதாக பிரதமர் கூறினார் அனால் அந்த கசப்பு மருந்து ஒத்துக் கொள்ளாமல் நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு அலர்ஜியை உண்டாக்கி விட்டது. இந்த அலர்ஜிக்கு இன்னமும் மாற்று மருந்து இல்லாத நிலையே உள்ளது.  2017 ஜூலை முதல் GST எனும் சரக்கு மற்றும் சேவை வரியை அமுல்படுத்தி (Goods and Services Tax) நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் சிக்கலை உருவாக்கி சிறு தொழில்கள் முடங்கியதுடன் விலைவாசியும் எங்கோ போய்க் கொண்டிரிக்கின்றன. ரூபாய் 40 க்கும்  50 க்கும் விற்ற ஹோட்டல் சாப்பாடு இப்போது ஒரு நடுத்தர ஹோட்டலில் ரூபாய் 70, 80 என உயர்ந்து விட்டது. கேட்டால் GST என்ற பதில் வருகிறது. டீ, காப்பி விலையும் தொடர்ந்து கூடிக் கொண்டே வருகிறது. விலைவாசி உயர்வுக்கு தோதாக நாட்டின்  கோடிக்கணக்கான மக்களுக்கு வருவாய் இல்லை. GST அமுல்படுத்த மாண்புமிகு காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா அவர்களின் இல்லத்திற்கும் (10 - JANPATH) முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் (Former Prime minister Dr.Manmohan Singh, 7-Race Corse) ஆகியோரது இல்லத்துக்கும் நேரில் சென்று ஆதரவு கேட்டார்கள். ஆனால், காங்கிரஸ் சொன்ன 18 சதவீதத்துக்கு பதிலாக 28 சதவீதத்தை அமுல்படுத்தி விட்டு, இதனால் பல முனைகளிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் இப்போது அதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

விலைவாசியை குறைக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும். கறுப்புப் பணம் நாட்டில் எவ்வளவு இருந்தது; எவ்வளவு வந்தது; எவ்வளவு எரிந்தது என்பதை எல்லாம் ஏற்கனவே நாம் படித்து விட்டோம். இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறோம். அதைப் பற்றி மீண்டும் விளக்க நான் விரும்பவில்லை.

ரூபாய் நோட்டில் உள்ள குறியீட்டில் (₹) படுக்கை கோடு ரூபாய் நோட்டின் மதிப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் கீழ்நோக்கி சரிப்பதாக உள்ளது. அதனால் தான் இந்தக் குறியீட்டை மாற்றித் தருவதாக ஏற்கனவே நான் காங்கிரஸ் அரசுக்கும் கூறியிருந்தேன். இப்போதைய அரசுக்கும் தெரியும். டெபிட் கார்டு (Debit Card), கிரடிட் கார்டு (Credit Card), ரூபே கார்டு (Rupay Card) மூலமாக மத்திய அரசு பண பரிவர்த்தனையை செய்யச் சொல்கிறது. நாட்டின் கோடிகணக்கான மக்களுக்கு இன்னமும் போஸ்ட் கார்டே (Post Card) எழுதத் தெரியாது.  இந்த நிலையில் எப்படி எல்லோராலும் இதைப் பின்பற்ற முடியும். பண மதிப்பிழப்பு என்பது பல நாடுகளிலும் சரியாக வெற்றிபெறவில்லை.

நன்றி !

ஏ. பாருக்,
'அரசியல் விமர்சகர்' 
68 காலியார் தெரு, 
அதிராம்பட்டினம் - 614 701. 
பட்டுக்கோட்டை தாலுகா, 
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...