Pages

Sunday, November 12, 2017

பஹ்ரைனில் பெட்ரோலிய பைப் லைன் குண்டு வீசி தகர்ப்பு!

அதிரை நியூஸ்: நவ.12
ஈரான் ஆதரவு பஹ்ரைன் வாழ் ஷீயா தீவிரவாதிகளால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று பஹ்ரைன். இங்கு ஷீயாக்கள் அடிக்கடி பல்வேறு வகையான போராட்டங்களை மேற்கொண்டு அரசை நிலைகுலையச் செய்ய தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுவதால் கேடுகெட்ட நாடுகளில் ஒன்றாக விளங்குவதையும் மறுப்பதற்கில்லை.

பஹ்ரைன் நாட்டின் முக்கிய வருவாய் பெட்ரோலிய ஏற்றுமதியின் மூலமே கிடைக்கின்றது. இந்த பெட்ரோலிய வருவாயை சிதைக்கும் நோக்குடன் கடந்த வெள்ளிக்கிழமை பின்னேரம் சுமார் 10 மணியளவில் தலைநகர் மனாமாவிலிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள 'பூரி' (Buri) என்ற கிராமத்தின் வழியாக கொண்டு வரப்படும் பெட்ரோலிய பைப் லைன் ஒன்றை தீவிரவாதிகள் குண்டு வீசி தகர்த்ததை தொடர்ந்து அருகிலிருந்த கட்டிடங்கள், வாகனங்கள் என அருகிலிருந்த அனைத்தும் தீயால் அழிந்தன.

தீ மேலும் பரவாமல் இருக்க உடனடியாக அந்த பைப் லைன் வழியாக கொண்டு செல்லப்படும் பெட்ரோல் நிறுத்தப்பட்டு பலமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீயணைப்புத் துறையினர். இதன் அருகிலேயே பஸ் நிலையம் ஒன்றும் மருத்துவமனை ஒன்றும் இயங்கி வருகிறது எனினும் மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மனித இழப்புக்கள் ஏதும் நிகழவில்லை என்றும், பொதுமக்கள் அனைவரும் அப்பறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் இந்த தீவிரவாத செயலின் பின்னே ஈரானின் கையிருப்பதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...