Pages

Sunday, November 19, 2017

அமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் சிக்கிய இந்திய மாணவரை தேடும் பணி தீவிரம்!

அதிரை நியூஸ்: நவ.19
கொர்பக்கான் வெள்ளத்தில் சிக்கிய இந்திய மாணவரை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈட்டுபட்டு வருகின்றனர்.

கொர்பக்கானில் எற்பட்ட திடீர் மழை வெள்ளத்தில் சிக்கிய இந்திய மாணவர்கள் 5 பேர் மீட்கப்பட்டு ஒருவர் காருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட செய்தியை நேற்று அதிரை நியூஸில் பதிந்திருந்தோம். இந்நிலையில் காணாமல் போன மாணவரை கண்டுபிடிப்பதற்காக துபை, அபுதாபி போலீஸாரும் ஷார்ஜா போலீஸாருக்குத் உதவியாக களத்தில் குதித்துள்ளனர்.

காருடன் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் பெயர் ஆல்பர்ட் ஜாய் என்றும் இவர் ராஸ் அல் கைமாவில் உள்ள Birla Institute of Technology Offshore Campus, Ras al Khaimah (BIT-RAK) என்ற கல்வி நிறுவனத்தில் பயின்று வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் போலீஸாரின் தேடுதல் வேட்டையின் போது ஆல்பர்ட் ஜாய் உடையதாக இருக்கலாம் என்று நம்பப்படும் சட்டை ஒன்றும் கிடைத்துள்ளது.

3 எமிரேட் போலீஸ் படையுடன் மாணவர் ஆல்பர்ட் ஜாயின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வெளிநாட்டு சமூக ஆர்வலர்கள் என பலரும் தேடி வருகின்றனர்.

வீடியோ:
https://www.facebook.com/GulfNews.UAE/videos/1691053224294262/

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...