Pages

Thursday, November 9, 2017

அதிராம்பட்டினம் கடலில் மாயமான மீனவர் சடலம் கரை ஒதுங்கியது !

அதிராம்பட்டினம், நவ.09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் 2 நாட்களுக்கு பிறகு சடமாக மீட்பு.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவர் மகன் முனியாண்டி (வயது 65). இவர் தஞ்சை மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் (சிஐடியு) சங்க மாவட்ட துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் தனியாக கடலுக்கு  சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வாக்கில் மீனவர் முனியாண்டி  மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளார். காலை 11 மணி வாக்கில் கரையில் இருந்து சுமார் 5 கிமீ தூரத்தில் முனியாண்டியின் படகு மட்டும் தனியாக நின்றதை பார்த்த மீனவர் ரெத்தினம் என்பவர், முனியாண்டியின் உறவினர்கள் மற்றும் அவசரகால மீட்பு படை 1093 க்கும் தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து கடலோர காவல்படை ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர்கள் ஞானசேகரன் மற்றும் அதிகாரிகள், மீனவர்கள் நான்கைந்து படகுகளில் சென்று கொட்டும் மழையிலும் கடலுக்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்நிலையில், 2 நாட்களுக்கு பிறகு மீனவர் முனியாண்டி உடல் இன்று வியாழக்கிழமை சடலமாக கரை ஒதுங்கியது. இதையடுத்து, உடல் பிரத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு பிரத பரிசோதனை முடிந்தவுடன், இன்று வியாழக்கிழமை இரவு உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோரப் காவல்நிலையப் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மாயமான மீனவர் முனியாண்டிக்கு மனைவி மாரிமுத்து, மகன்கள் ராமு, பாலமுரளி, தர்மராஜ் ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...