Pages

Monday, November 6, 2017

தஞ்சை சாந்தபிள்ளை கேட் மேம்பாலம் ~ ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாநகராட்சி சாந்தபிள்ளைகேட் மேம்பாலத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (06.11.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாநகராட்சி சாந்தபிள்ளை கேட் மேம்பாலம் இன்று ஆய்வு செய்யப்பட்டதில்  ஒரு சிறிய அளவிலான வெடிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. பொதுமக்கள் அச்சப்படும் அளவிற்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. பொது மக்களுக்கான முழு வசதிகளுடன் தான் இப்பாலம் திறக்கப்படவுள்ளது. நெடுஞ்சாலைத் துறை தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு இந்த பாலம் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சரவணன், வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் அலுவலர்கள் உடன்  இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...