Pages

Tuesday, November 7, 2017

துபை ஜுமைரா லேக் பகுதியில் இலவச பார்க்கிங் சலுகை மிக விரைவில் ரத்து !

அதிரை நியூஸ்: நவ.07
நியூ துபை என அழைக்கப்படும் ஜூமைரா லேக் டவர்ஸ் (JLT) பகுதியில் சுமார் 92,500 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள பார்க்கிங் பகுதிகளில் 2 கட்டங்களில் இனி கட்டணங்கள் வசூலிக்கப்படத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சனிக்கிழமை முதல் வியாழன் வரை தினசரி காலை 8 முதல் இரவு 10 மணிவரை கட்டண பார்க்கிங் செயல்படும்.

முதற் கட்டமாக இந்த வருட இறுதிக்குள் 1,936 கார் நிறுத்தங்கள் கட்டண பார்க்கிங் பகுதிகளாக மாற்றப்படவுள்ளன. இங்கு நிறுத்தப்படும் கார்கள் மணிக்கு 4 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும். 2வது கட்டமாக சுமார் 460 கட்டண கார் நிறுத்தங்கள் 2020 ஆம் ஆண்டிற்குள் நடைமுறைக்கு வரும்.

பிரிமியம் பார்க்கிங்குகளில் மணிக்கு 10 திர்ஹம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றாலும் அதிகபட்சம் 3 மணிநேரம் மட்டுமே தொடர்ச்சியாக நிறுத்த அனுமதிக்கப்படும்.

மாதாந்திர சீஸன் பார்க்கிங் அனுமதியில்லை மாறாக தங்களுடைய பில்டிங் பார்க்கிங்களையே தங்கியிருப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என துபை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...