Pages

Sunday, November 19, 2017

இணையதள நடத்துனர்களுக்கு ~ முக்கிய அறிவிப்பு!

அன்புள்ள,

சமூக இணைய தளங்கள் நடத்தும் நிர்வாகிகட்கு...

நலம்.. நலமறிய ஆவல்...

வளைகுடா நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழ் சொந்தங்கள் உட்பட உலகளாவிய தமிழர்கள் பயன்பெறும் வகையில், அந்தந்தப் பகுதிகளில் நிகழும் அன்றாட முக்கிய நிகழ்வுகள், அந்தந்த நாட்டு அரசுகள் வெளியிடும் முக்கிய அறிவிப்புகள், நாடுகளின் சட்டதிட்டங்கள், பல்சுவை செய்திகள், புனிதமிகு ஹஜ் குறித்து பயன்தரும் செய்திகள், உலகச் செய்திகள், சுற்றுலா, வரலாற்றுச் செய்திகள் ஆகியவற்றை, ஆங்கில இணைய தளங்களை ஆதாரமாகக்கொண்டு, மிகுந்த சிரமத்திற்கு மத்தியில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழில் மொழி பெயர்ப்பு செய்து, அவற்றை எங்களது 'அதிரை நியூஸ்' [ www.adirainews.net ] இணையதளத்தில் 'நம்ம ஊரான்' என்ற பெயரில் தினந்தோறும் வெளியீட்டு வருகிறோம். இதுவரையில், சுமார் 1300 க்கும் மேற்பட்ட 'நம்ம ஊரான்' பதிவுகள் பதியப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் எவ்வித லாப நோக்கமின்றி, பொதுநல சேவை அடிப்படையில் அதிரை நியூஸ் இணையதளத்தில் பிரத்தியோகமாக பதியப்பட்டவை.

எங்களைப் பொறுத்தவரை இத்தளத்தை பொதுநல சேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இத்தளத்தை பயன்படுத்தி விளம்பரங்கள் தேடுவதோ, அரசியல் ஆதாயத்திற்காக அல்ல.  அதிரை நியூஸ் இணையதளத்தில் பதிந்த சில நிமிடங்களிலேயே எங்களது செய்திகளை COPY - PASTE செய்து, செய்தியை யாரிடம் யார் திருடியது..என்பது தெரியாத அளவிற்கு சமூக இணையதளங்களில், அதன் நடத்துனர்களால் பகிரப்படுகிறது.

ஊடகத்துறையில் மொழிபெயர்ப்பு என்பது மிகுந்த மரியாதை தரக்கூடியது என்பது மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரின் ஏகோபித்த வரவேற்பை  பெறக்கூடியது. மொழி பெயர்ப்பு திறனை அதிகமாக வளர்த்துக்கொள்வதன் மூலம் ஊடகவியாளர்கள் கணிசமான சம்பளத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகளை ஊடகத்துறையில் பெற முடியும். ஆதலால், ஊடகப்பணிகளில் ஆர்வம் கொண்ட தன்னார்வல இளைஞர்கள் மொழிபெயர்ப்பில் அதிக ஆர்வம் கொள்ள வேண்டும். செய்திகளுக்காக பிறரைச் சார்ந்து இருப்பது, தங்களது சிந்தனைத் திறன் குறைந்துவிடுவதோடு மட்டுமல்லாமல், எழுத்தாற்றலும் பலகினமாகிவிடும். மேலும், தாங்கள் நடத்தி வரும் சமூக ஊடகங்கள், வாசகர்களின் நன்மதிப்பை இழந்துவிடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

எவ்வித லாப நோக்கத்திற்காக நாங்கள் எங்களது தளத்தை நடத்தவில்லை என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறோம். எங்களது தளத்தில் பதியப்படும் மொழிபெயர்ப்பு செய்திகளை, தங்களது தளத்திற்காக எடுத்துப் பதிவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சோபனை இல்லையென்றாலும், ஊடக தர்மம், எங்களது உழைப்பு, நாங்கள் செலவிடும் நேரம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, எங்களது தளத்தின் பெயர் அல்லது தளத்தின் முகவரியை அடிக்குறிப்பிட்டு பதிவதில் அப்படி என்ன சங்கடம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது?

எங்கள் தளத்தில் பதியப்படும் செய்திகளை எங்களது அனுமதியின்றி, எடுத்து பதிந்துவிட்டு, எங்களது பெயரை மறைத்து வெளியிடுவது நியாமா சகோதரர்களே? இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என நாங்கள் நம்புகிறோம்..

நன்றி!

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...