Pages

Tuesday, November 7, 2017

அதிராம்பட்டினம் 'வெதர்மேன்' சாவண்ணா வழங்கும் மழை ரிப்போர்ட்!

அதிராம்பட்டினம், நவ.07
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம்  மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை நிலவரம் குறித்து அதிராம்பட்டினம் வெதர்மேன் சாவண்ணா என்கிற ஏ. சாகுல் ஹமீது வழங்கும் மழை ரிப்போர்ட்;

அதிராம்பட்டினத்தில், கடந்த,
அக். 21 ந் தேதி  03.40 மி.மீ
அக். 26 ந் தேதி  0.50 மி.மீ
அக். 29 ந் தேதி  06.40 மி.மீ
அக். 31 ந் தேதி  49.50 மி.மீ
நவ. 01 ந் தேதி   04.50 மி.மீ
நவ. 03 ந் தேதி  07.20 மி.மீ
நவ. 04 ந் தேதி  26.60 மி.மீ (காலை)
நவ. 04 ந் தேதி  10.80 மி.மீ (மாலை)
நவ. 05 ந் தேதி  25.20 மி.மீ
நவ. 06 ந் தேதி  26.00 மி.மீ
நவ. 07 ந் தேதி  06.70 மி.மீ (காலை)

என மொத்தம் 166.80 மி.மீ ( 16.68 செ.மீ ) மழை இன்று நவ. 7 ந் தேதி காலை 8.30 மணி வரை பதிவாகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு 622.78 மி.மீ, 2016 ஆம் ஆண்டு 521.61 மி.மீ, 2017 ஆம் ஆண்டு ( நவ. 7 ந் தேதி வரை ) 849.33 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இவை, கடந்த ஆண்டுகளை வீட நடப்பாண்டில் கூடுதலாக மழை பதிவாகி உள்ளது.

இந்த பருவ மழையால், அதிராம்பட்டினம் பகுதி நீர் மட்டம் ஓரளவு உயர்ந்து இருப்பது மகிழ்வைத் தந்தாலும், அதிரையில் உள்ள ஒரு சில குளங்களைத் தவிர மீதமுள்ள குளங்களில் மழை நீர் நிரம்பாதது வருத்தமளிக்கிறது. காரணம், குளத்திற்கு வருகின்ற மழைநீர் வடிகால் பாதைகளில் சூழ்ந்துள்ள குப்பைக் கழிவுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் குளத்தில் போதுமான மழைநீர் நிரம்பாமல் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், மழை நீர் அனைத்தும் வீணாகக் கடலில்  சென்று கலந்து வருகிறது.

பருவ மழை பெய்வதற்கு முன்பாகவே குளங்களுக்கு செல்லும் நீர் ஆதார வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்யும் பணிகளில்  தன்னார்வல இளைஞர்கள் முழு மூச்சாக ஈடுபட வேண்டும். இனிவரும் காலங்களில் மழைநீரை சேகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து, அதற்கான முயற்சியில் அதிராம்பட்டினம் பகுதி ஒவ்வொரு பொதுமக்களும் ஈடுபட வேண்டும். சுற்றுச்சூலலைப் பாதுகாக்கும் வகையில், குடியிருப்பு பகுதி மற்றும் சாலைகளில் அதிக மரக்கன்றுகளை நடவேண்டும். அரசு வலியுறுத்தும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை வீடுதோறும் அமைத்து, அதில் மழைநீரை சேகரிக்க வேண்டும்' என்றார்.

செய்தி தொகுப்பு மற்றும் படம்:
அஜீம் (மாணவச் செய்தியாளர்)

2 comments:

  1. மழைக்காலங்களில் "வெதர்மேன் " கோடைகாலங்களில் சம்மர் மேனா? மழை பெய்யாத நேரத்தில் இவரு குடைபிடிப்பாராம்- நல்லா படத்தை பாருங்க; தாங்கமுடியல ; ஊரிலே ரொம்ப பேரு இப்படி தான் அடைமொழி போட்டுக்கிறாங்க; சரி எந்த சேனலில் இவரின் செய்தி வருது?

    ReplyDelete
  2. தம்பி மஸ்தான் கடந்த 1O நாட்க்க லாக அதிரையில் கொட்டிய மழையின் அளவு தான் சொல்லி இருக்கோம் வேர ஒன்றும் இல்லையே? மழை அதிரையில் கொட்டும் போது எவட இருந்தீர்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...