Pages

Saturday, November 4, 2017

எடைபோட்டு ஏற்றப்படும் விமானப் பயணிகள் !

அதிரை நியூஸ்: நவ. 04
நம்மில் அனேகர் விமானப் பயணம் செய்த அனுபவம் உள்ளவர்களே! நம்முடைய பயணத்தின் போது லக்கேஜ், கேபின் பேக் போன்றவற்றை எடைபோட்டு அளவிற்குத்தக்க அனுமதிக்கும் விமான சேவை நிறுவனங்களை பார்த்திருப்போம் ஆனால் பின்லாந்து (Finland) நாட்டின் தலைநகர் ஹெல்சிங்கி (Helsinki) விமான நிலையத்தில் அதன் தேசிய விமான நிறுவனமான பின்ஏர் (FinnAir) விமானத்தில் பயணிகளையும் எடைபோடும் முறை அறிமுகமாகியுள்ளது.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பறக்கும் பயணிகளை மட்டும் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு வரை எடைபோட்டு வெயில் காலத்திய உடையுடனும் குளிர்காலத்தில் அனியும் கூடுதல் உடைகளையும் இந்த கணக்கெடுப்பில் சேர்த்து சோதனை முடிவின் அடிப்படையில் பயணிகள் பாதுகாப்பு, எரிபொருள் மிச்சம் போன்றவற்றை தீர்மானிக்கவுள்ளார்களாம்.

எடைபோட விரும்பாத பயணிகளை கட்டாயப்படுத்துவதில்லை. கையில் எடுத்துச் செல்லப்படும் சராசரி 6.1 கிலோவுடன் ஆண்களின் சராசரி 88 கிலோ, பெண்களின் சராசரி 70 கிலோ, குழந்தைகளின் சராசரி 35 கிலோ என்று நடப்பு விபரங்கள் சொல்கின்றது.

பயணிகளை எடைபோடும் பணியில் தற்போது 180 தொண்டர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் சுமார் 2,000 தொண்டர்கள் வரை தேவைப்படுகிறதாம். இதைப் போன்ற பரிசோதனையை 1980 ஆம் ஆண்டும் ஒருமுறை பின்ஏர் செய்துள்ளது.

அமெரிக்கன் சமோவா (American Samao) என்ற நாட்டைச் சேர்ந்தவர்களே உலகில் மிகவும் குண்டு மனிதர்கள் நிறைந்த பகுதியாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒபேசிட்டி (Obesity) எனும் நோயால்  பாதிக்கப்பட்டுள்ள இந்த உடல் பெருத்த மனிதர்களால் விமானம் ஒரு பக்கமாக எடை கூடி குடைசாய்ந்து விடாமல் தடுக்கும் பொருட்டு அவர்களுடைய இருக்கைகளை எடை சமன்பாட்டிற்கு ஏற்றவாறு பகிர்ந்தளிக்கும் நடைமுறை 2,600 மைல் தொலைவுடைய ஹோனோலூலூ (Honolulu) – பகோ பகோ (Pago Pago) (அமெரிக்கன் சமோவா) விமான மார்க்கத்தில் மட்டும் 2016 ஆம் ஆண்டு முதல் கட்டாய எடை சட்டம் அமுலில் உள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் உஸ்பெகிஸ்தான் விமான நிறுவனமும் எடைபோட்டுத் தான் பயணிகளை ஏற்றி வருகிறது.

Source: The Independent Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...