Pages

Thursday, November 16, 2017

சவுதியில் இருந்து கனவுகளுடன் நாடு திரும்பிய இந்தியர் விமானத்தில் மரணம் !

அதிரை நியூஸ்: நவ.16
சவுதி அரேபியா, ரியாத்திலிருந்து கோழிகோடு சென்ற விமான பயணி அபுதாபியில் மரணம்

சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்திலிருந்து கேரள மாநிலம் கோழிகோடு (Calicut) விமான நிலையத்திற்கு ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில் சென்ற பயணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் அவசரமாக விமானம் அபுதாபியில் இறக்கப்பட்டது. எனினும், பயணி முஹமது சலீம் இறந்துவிட்டதாக அபுதாபி மப்ரக் மருத்துவமனை (Mafraq Hospital) அறிவித்துள்ளது.

கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்த இளைஞர் முஹமது சலீமுக்கு விமானம் வானில் பறக்கும் போது திடீர் சுகவீனம் ஏற்பட்டதால் நேற்று (புதன்) மாலை சுமார் 3.51 மணியளவில் அபுதாபியில் தரையிறக்கப்பட்ட விமானம் விமான நெறிமுறைகளின்படி (As per protocols) மரணித்த பயணியின் பயணப்பொதிகளை அபுதாபியிலேயே இறக்கிவிட்டு மீண்டும் மாலை 5.48 மணியளவில் கோழிக்கோடு புறப்பட்டுச் சென்றது.

சிதைந்த கனவுகள்:
6 மற்றும் 3 வயது குழந்தைகளுக்கு தந்தையான முஹமது சலீமுக்கு சில நாட்களுக்கு முன் மெல்லிய நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவரது இன்ஷூரன்ஸ் கார்டு மூலம் தொடர் சிகிச்சையை சவுதியில் மேற்கொள்ள முடியாது என்பதால் டாக்டரின் ஆலோசணைப்படி இந்தியாவில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

மேலும் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து 14 வருட வெளிநாட்டு உழைப்பின் பயனாக தன்னுடைய மருத்துவ விடுப்பையே ஆண்டு விடுப்பாக மாற்றிக்கொண்டு தான் புதிதாக கட்டிய வீட்டில் குடியேறவும், இன்னும் இரு மாதங்களின் நடைபெறவிருந்த தனது தம்பி, தங்கையின் திருமணத்தையும் நடத்தி வைக்கவும் திட்டமிட்டிருந்துள்ளார்.

அனைவருக்கும் பொதுவான இஸ்லாமிய படிப்பினை:
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! .......

63:10. உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.

3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.

62:8. “நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

2 comments:


  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...