Pages

Monday, November 20, 2017

வேகத்தை கட்டுப்படுத்த சிவப்பு நிறத்தில் துபாய் ஷேக் ஜாயித் சாலை (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ.20
துபை ஷேக் ஜாயித் ரோட்டில் வேகம் குறைக்கப்பட்டதை அறிவிக்கும் சிவப்பு வண்ண சாலை

துபையில் பிரசித்தி பெற்ற நெடுஞ்சாலையான ஷேக் ஜாயித் ரோட்டில் வேகம் குறைக்கப்பட்டுள்ள பகுதிகளை வாகன ஓட்டுனர்களின் கவனத்தை ஈர்த்து அறிவிக்கும் சிவப்பு வண்ண சாலைகள் வருவது குறித்து முன்பே அதிரை நியூஸில் பதிந்திருந்தோம்.

இதன் ஆரம்பகட்ட சோதனை முயற்சியாக முதலில் 'பு கத்ராஹ் இன்டெர்சேஞ்ச்' அருகிலுள்ள அவுது மேத்தா ரோட்டில் மணிக்கு 100 கி.மீ வேகத்திலிருந்து 80 கி.மீ வேகத்திற்கு குறைக்கப்பட்டுள்ளதை அறிவிக்கும் நோக்குடன் கடந்த ஜூன் மாதம் சிவப்பு வண்ணம் பூசப்பட்டது.

தற்போது ஷேக் ஜாயித் ரோட்டில் மணிக்கு 120 கி.மீ வேகத்திலிருந்து 100 கி.மீ வேகத்திற்கு குறைக்கப்பட்டுள்ளதை அறிவிக்கும் சிவப்பு வண்ண சாலை 5வது இன்டெர்சேஞ்ச் அருகே பூசப்பட்டுள்ளது. இது குறித்த செய்திகள் வாகன ஓட்டிகளை சென்றடையும் வகையில் சமூக வலைத்தளங்கள் வழியாகவும் துபை போக்குவரத்து தஐற பரப்பி வருகிறது.

விரைவில், ஜெபல் அலி – லெஹ்பாப் சாலையிலும் சிவப்பு வண்ணம் பூசப்படுவதன் மூலம் அங்கும் மணிக்கு 120 கி.மீ வேகம் 100 கி.மீயாக குறைக்கப்படவுள்ளது. செஞ்சாலைகள் படிப்படியாக வரும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...