Pages

Wednesday, November 8, 2017

அதிரையிலிருந்து திமுகவினர் கருஞ்சட்டை அணிந்து போராட்டக் களத்திற்கு புறப்பட்டனர் !

அதிராம்பட்டினம், நவ.08
பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து, திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என திமுகவினரை, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியதை அடுத்து, திமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமாகிய டி.ஆர் பாலு தலைமையில், தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், திமுக மீனவரணி அமைப்பாளர் அ.இராஜதுரை, வார்டு பொறுப்பாளர் நிஜாமுதீன், நூர், அபூபக்கர் உள்ளிட்ட திமுகாவினர் அதிராம்பட்டினத்திலிருந்து கருஞ்சட்டை அணிந்து இன்று புதன்கிழமை காலை தஞ்சை புறப்பட்டுச் சென்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...