Pages

Monday, November 6, 2017

துபை மெட்ரோ சேவையில் இன்று காலை தடங்கல் ~ பயணிகள் கடும் அவதி!

அதிரை நியூஸ்: நவ. 06
துபையில் இயங்கும் ரெட் லைன் (Red Line) மெட்ரோ ரயில்கள் சேவையில் இன்று இருமுறை தடங்கல் ஏற்பட்டது. சுமார் 40 நிமிடங்களுக்கு அல் ராஷிதியா முதல் யுஏஈ எக்ஸ்சேஞ்ச் நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் இயங்காததால் அலுவலகத்திற்கு செல்வோர், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர் என அனைத்து மெட்ரோ பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.

முழுமையாக கம்ப்யூட்டர் கட்டளைகள் மூலம் இயக்கப்பட்டு வந்த துபை மெட்ரோ ரயில்களை முதன்முதலாக டிரைவர்கள் இயக்கும் அதிசயமும் காணக் கிடைத்தது. ADCB (கரமா), பர்ஜூமான், டாமாக், ஜூமைரா லேக் டவர்ஸ் போன்ற நிலையங்களில் பயணிகள் நீண்டநேரம் கியூவில் காத்துக்கிடந்தனர்.

ரெட் லைன் எனப்படும் 52.1 கி.மீ தூர தடத்தில் 29 நிலையங்கள் உள்ளன. சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் ரயில்கள் வரவில்லை என பயணிகள் கூறும் நிலையில் 40 நிமிடங்களில் தடங்கல் சரிசெய்யப்பட்டதாகவும், தடங்கலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் துபை போக்குவரத்து துறை (RTA) தெரிவித்துள்ளது.

காலை சுமார் 7.30 மணியளவில் சேவையில் ஏற்பட்ட தடங்கல் காலை 8.25 மணியளவில் சரிசெய்யப்பட்டதாகவும் பின்பு 9 மணியளவில் இன்னும் மெட்ரோ சேவை துவங்கப்படவில்லை என பயணிகள் டிவிட்டரில் பதிவிட்டிருந்தனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...