Pages

Saturday, November 11, 2017

பறவைகளை வேட்டையாடி உண்ணும் தேங்காய் நண்டுகள் (வீடியோ)

அதிரை நியூஸ்: நவ.11
நண்டுகள் தெரியும் நாம் உண்பதற்கு மிகச்சுவையானவை, அது என்ன தேங்காய் நண்டுகள்? (Coconut Crabs) இந்த நண்டுகள் மரங்களில் ஒட்டிக்கொண்டு வாழும் தன்மையுடையவை. இந்த நண்டுகள் பொதுவாக நீலநிறத்தை பிரதிபலிக்கும் கடற்கரைகளையுடைய தீவுகள் மற்றும் கடற்கரை பிரதேசங்களில் வாழக்கூடியவை. இவற்றிற்கு கொள்ளைகார நண்டு (robber Crab) என்றும் பனைமரத் திருடன் (Palm Thief) என்ற செல்லப் பெயர்களும் உண்டு.

இந்த நண்டுகள் பொதுவாக செத்த உயிரினங்களை உண்டும், தேங்காய்களை தனது கொடுக்குகளால் பிளந்து அதன் வெண்மையான பருப்புக்களை உண்ணக்கூடியவை. இவை மனிதர்கள் சாப்பிடத்தகுந்தவையே என்றாலும் இவை விற்பனைக்காக பிடிக்கப்படுவதில்லை. நிற்க,

இந்தியப் பெருங்கடலில் உள்ள 'சகோஸ் ஆர்ச்சிபெலகோ' (Chagos Archipelago) எனும் தீவு ஒன்றில் தேங்காய் நண்டு ஒன்று மரத்தில் கூடுகட்டியிருந்த பறவை ஒன்றை திடீரென தாக்கி அதன் இரு இறக்கைகளையும் அதன் கொடுக்குகளால் ஒடித்து அந்தப் பறவையை முதலில் செயலிழக்க செய்கின்றது. வீழ்த்தப்படும் பறவையை மேலும் சில நண்டுகளும் ஒன்று சேர்ந்து சில நிமிடங்களில் தின்று தீர்க்கும் காட்சிகள் முதன்முதலாக விஞ்ஞானிகளின் கவனத்திற்கு வந்து அவர்களை பெரிதும் ஆச்சரியமூட்டியுள்ளது.

தோற்றத்தில் பிரமாண்ட சிலந்திகளைப் போல் காணப்படும், பறவைகளை வேட்டையாடி உண்ணும் இந்த தேங்காய் நண்டுகள் குறித்து மேலும் ஆராய்ச்சி செய்யவும், தேங்காய் நண்டுகளின் பறவை வேட்டைகளால் உணவு சுழற்சி மற்றும் சுற்றுச்சூழலில ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் விஞ்ஞானிகள் ஆராய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Source: Mirror / Msn
தமிழில்: நம்ம ஊரான் 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...