Pages

Monday, November 6, 2017

குவைத் வாழ் அதிரையர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி (படங்கள்)

குவைத் வாழ் அதிரையர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி மற்றும் அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் கடந்த (நவ. 3) வெள்ளிக்கிழமை ஃபின்தாஸ் கடற்கரையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அவ்வமைப்பின் குவைத் கிளைத் தலைவர் ஜெய்னூல் ஹுசைன் தலைமை வகித்து பேசியது;
வழமையாக ஆதரவற்றோர் உதவித்திட்டம் (Pension), RD (Recurring Deposit), போன்றவற்றில் நம்மவர்களின் பங்களிப்புகளுக்குப்பின், அன்னதான திட்டத்தை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தவும், கழிப்பறை வசதிகள் இல்லாத வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கவும் அதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். மேலும், பிற நாடுகளில் வசிக்கும் நல்லெண்ணம் கொண்டோரின் பங்களிப்புகளை வரவேற்கிறோம் என்றார்.

மேலும், கூட்டத்தில், அதிராம்பட்டினம், ஆலடிக்குளத்தை சுற்றி அழகிய பூங்கா அமைக்கும் பணியை விவரித்து, அதற்கு பங்களிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பிலால் நகரில் கழிப்பறைகள் இல்லாத சுமார் 90 வீடுகளுக்கு மேலாக அரசு சார்பில் கழிப்பறை கட்டுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் ஏரிப்புறக்கரை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதற்காக, அரசு தரும் மானியம் ரூ.12,000/- மேற்கொண்டு தேவைப்படும் தொகையை அதிரை பைத்துல்மால் சார்பில் வழங்கப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதிகள் செய்துதர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்பணிக்காக இதுவரை ரூ.1 லட்சத்திற்கும் மேல் திரட்டி இருப்பதகாவும், ஒரு கழிப்பறை கட்டுவதற்கு ரூ. 20,000/- பட்ஜெட் எனவும்,  இதனால் ஊரில் சுகாதரம் பேணப்படுவதுடன் நம் பெண்களின் மானம் காப்பாற்றப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பொருளுதவி செய்ய விரும்புபவர்கள் சகோ இஸ்மாயிலை +965 99298319 (WhatsApp), 66387938 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கபட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...