Pages

Thursday, November 9, 2017

அமீரகத்தில் அப்துல் வஹாபுக்கு நிகழ்ந்த சோகம் !

அதிரை நியூஸ்: நவ.09
அமீரகம், ராஸ் அல் கைமாவில் கவனமின்றி பணப்பையை குப்பையில் எறிந்த இந்தியர் படும்பாடு

கவனமின்மையால் சில நொடிகளில் நடந்தேறிவிடும் சம்பவங்கள் பின் வாழ்க்கையையே முழுமையாக சிதைத்துவிடும் என்பதற்கு ஒரு உதாரணம் இந்த முன்னாள் நிறுவன மேலாளர் அப்துல் வஹாப் என்ற இந்தியரின் வாழ்க்கை.

அமீரகத்திலேயே பிறந்து வளர்ந்த இந்தியரான அப்துல் வஹாப் தான் பணியாற்றி நிறுவனத்தில் சிறந்த மேலாளர் என ஒருமுறை பாராட்டி கவுரவிக்கப்பட்டவர். 2015 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் ஷார்ஜா அல் நஹ்தா பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் தனது காரிலிருந்த குப்பைகளை அள்ளி வீசிவிட்டு வந்தவர் மீண்டும் சில மணிநேரங்களில் அந்த குப்பைத் தொட்டிக்கே திரும்பி சல்லடைபோட்டுத் தேடுகிறார், Its Gone.

கம்பெனி முதலாளியிடம் தான் தவறுதலாக 105,439 திர்ஹம் வைத்திருந்த பையையும் தூக்கி எறிந்த விஷயத்தை சொல்ல, அவர் பணம் திருட்டு போய்விட்டதாக காவல்துறையிடம் புகார் சொல்ல ஆலோசணை தருகிறார், முதலாளியின் நோக்கம் தொலைந்த பணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து திரும்பப் பெறுவதே.

பொய் சொல்ல மனம் ஒப்பாத அப்துல் வஹாப் காவல்துறையிடம் உண்மையை சொல்லிவிட்டு தொலைந்த பணத்தை தவணைமுறையில் அடைத்துவிடுவதாக முதலாளியிடம் சொல்கிறார். கோரிக்கை மறுக்கப்படுகிறது, தொலைந்த பணத்திற்கு ஈடாக பணத்தை திரும்பத் தரும்வரை வைத்துக் கொள்ள தந்த 105,439 திர்ஹத்திற்கான செக் வேண்டுமென்றே வங்கியில் போடப்படுகிறது, ஒரே மாதத்தில் வேலையும் பறிக்கப்படுகிறது.

சந்தித்த விளைவுகள், தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேற்றப்படுதல், வீடு, உணவு, வேலை என எதுவும் இல்லாத நிலையில் தனது காரிலேயே தெருவில் தங்கும் நிலை. மேலும், வேறு ஒரு வங்கி லோனுக்காக கொடுக்கப்பட்ட செக் பணமின்றி திரும்பியதால் 2 மாத சிறைவாசம் என அடிக்கத் துவங்கிய ஒரு பெரும் சூறாவளி இன்றும் விட்டபாடில்லை.

ஒரு காலத்தில் தனது காருக்குள் உணவுப் பொட்டலங்களின் குப்பைகளை குவித்து வைத்திருந்தவருக்கு இன்று நூடுல்ஸ் பாக்கெட்டுகளே உணவு. இந்த நிலை இன்னும் எத்தனை நாளைக்கு என தெரியாத நிலையில் திக்குத் தெரியாத ஓடமாய்.

சில நொடி கவனமின்மையால் கற்ற மறக்கவே இயலாத வாழ்க்கை பாடத்துடனும் பற்றிட ஆதரவு கிடைக்காத என்ற ஏக்கத்துடனும் 32 வயது அப்துல் வஹாப்.

அப்துல் வஹாப்பிற்கு உதவிட விரும்புவோர் இந்த ஈமெயில் முகவரி வழியாக தொடர்பு கொள்ளலாம்.

editor@xpress4me.com

Source: gulfnews.com/xpress
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...