Pages

Friday, November 10, 2017

அதிராம்பட்டினத்தில் வீணாகும் ஏரி நீர் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், ஏரிப்புறக்கரை ஊராட்சி பெரிய மற்றும் சின்ன ஏரிகளில் நீர் நிரம்பி, அதன் உபரி நீர் ஈஸ்ட் கோஸ்ட் சாலையையொட்டி அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால் வழியாக வெளியேறி அதிராம்பட்டினம் கடலில் கலந்து வீணாகிறது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் அதிரை அமீன் கூறியது;
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அண்மையில் பெய்த தொடர் மழையால் ஏரிபுறக்கரை ஊராட்சி ஈஸ்ட் கோஸ்ட் சாலையையொட்டி அமைந்துள்ள இரண்டு ஏரிகளிலும் நீர் நிரம்பி, அதன் உபரி நீர் கடந்த 4 தினங்களாக வெளியேறி வீணாகக் கடலில் கலக்கிறது.  வெளியேறும் உபரி நீரை, ஏரி மற்றும் வாய்க்காலையொட்டி நீரின்றி வறண்டு காணப்படும் பள்ளக்குளம், வெட்டிக்குளம் போன்ற குளங்களில் நிரப்பிக்கொள்ளும் முயற்சியில் தன்னார்வலர்கள் முன்வர வேண்டும்' என்றார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...