Pages

Thursday, November 9, 2017

தஞ்சை ஆற்றாங்கரையில் ஆண் குழந்தை மீட்பு !

தஞ்சாவூர், நவ.09
கடந்த 16.10.2017 அன்று பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை தஞ்சாவூர் புது ஆற்றின் கரையில் துணிப்பை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டு, பின்பு தஞ்சாவூர், சிறப்பு சிறார் காவல் ஆய்வாளர் மற்றும் தஞ்சாவூர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரால் தஞ்சாவூர், இராஜா மிராசுதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் 06.11.2017 அன்று இக்குழந்தை தஞ்சாவூர், மாவட்ட சமூக நல அலுவலர் மூலம் மதுரை, கிரேஸ் கென்னட் பவுன்டேசன் மழலை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டான். 

இக்குழந்தைக்குரியவர்கள் யாரேனும் இருப்பின், தங்கள் ஆட்சேபனையை இவ்வறிவிப்பு கொடுத்து 21 நாட்களுக்குள், மாவட்ட குழந்தைகள் நலக்குழு, அரசினர் குழந்தைகள் இல்ல வளாகம், வ.உ.சி. நகர், தஞ்சாவூர் 613 007 என்ற முகவரியில் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்படி ஆட்சேபனை எதுவும் தெரியப்படுத்தப்படாத பட்சத்தில், இக்குழந்தையை தத்துக்கேட்டு விண்ணப்பித்துள்ள பெற்றோருக்கு தத்துக்கொடுக்கப்படும் என்பதை அறிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...