Pages

Monday, November 13, 2017

துபையில் பெயில் ஆன விரக்தியில் RTA மீது குற்றம் சுமத்தி ஈமெயில் அனுப்பிய இந்தியர் கைது!

அதிரை நியூஸ்: நவ.13
துபை போக்குவரத்து துறையின் (RTA) மீது குற்றம் சுமத்தி அவர்களுக்கே ஈமெயில் செய்த 25 வயது இந்தியர் ஒருவர் RTA புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். துபை போக்குவரத்து துறையின் கீழ் தான் வாகன ஓட்டுனர்களுக்கு சோதனை நடத்தி லைசென்ஸ் வழங்கும் பிரிவும் இயங்குகிறது.

பொதுவாக துபையில் யாரும் எளிதில் வாகன ஓட்டுனர் லைசென்ஸ் பெற்றுவிட முடியாது. நீண்ட காலம் எடுத்துக் கொள்வதுடன் அதிக பணத்தையும் செலவழிக்க வேண்டியிருக்கும் என்றாலும் அத்திபூத்தாற்போல் சிலருக்கு சிக்கிரமே லைசென்ஸ் கிடைத்துவிடுவதும் உண்டு. மேலும், தங்களுடைய தாய்நாடுகளில் பல வருடம் வாகனம் ஓட்டிய அனுபவம் உள்ளவர்கள் கூட மாதக்கணக்கில் காத்திருக்க நேரிடும், சிலருக்கு வருடங்கள் ஆகலாம்.

இந்நிலையில், இதுபோல் பலமுறை முயன்று விரக்தியான இந்தியர் ஒருவர் துபை போக்குவரத்து துறையை சாடி, ஏழைகளின் பொருளாதாரத்தை துபை போக்குவரத்துத் துறை வாகன ஓட்டும் சோதனை என்ற பெயரில் சுரண்டுவதாகவும், வேண்டுமென்றே ஓட்டுனர் சோதனையின் போது பெயில் ஆக்கப்படுவதாகவும், அப்படி பாதிக்கப்பட்ட ஏழைகளில் தானும் ஒருவர் என்றும், இன்னும் சில அவதூறான வார்த்தைகளை இணைத்து தனது ஐபோனிலிருந்து துபை போக்குவரத்து துறைக்கே ஈமெயில் அனுப்பியுள்ளார்.

ஈமெயிலை கண்ட துபை போக்குவரத்து துறையினர் போலீஸாரிடம் புகார் தர, ஈமெயில் அனுப்பிய இந்தியர் மீது வழக்குப் பதியப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவரது வழக்கு மீண்டும் டிசம்பர் 5 ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...