Pages

Tuesday, December 12, 2017

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 15-12-2017 இறுதி நாள்!

இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டவாறு கடந்த 03-10-2017 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மீது சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2018 க்கான பணிகள் 30-11-2017 லிருந்து 15-12-2017 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு 31-12-1999 வரை பிறந்தவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட தொடர்புடைய வட்ட அலுவலகங்களில் படிவம் 6ஐ பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் வயதிற்கான ஆதார சான்று நகல் மற்றும் இருப்பிட முகவரிக்கான ஆதார நகல் ஆகியவற்றை இணைத்து படிவம் பெற்ற இடத்திலேயே அளித்திடலாம் என அறிவிக்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த. வெளிநாட்டில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் வசித்து வரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்  படிவம் 6A  அளித்து தங்கள் பெயரினை வாக்காளர் பட்டயலில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொது மக்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க. நீக்க. உரிய மாற்றங்கள் மேற்கொள்ள நேரடியாக உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்க இயலாதவர்கள், Online மு்லமாகவும் விண்ணப்பிக்கலாம்.
 
Online மு்லம் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.elections.tn.gov.in

இறுதி வாக்காளர் பட்டியல் 10-01-2018 அன்று வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...