Pages

Thursday, December 7, 2017

அமீரகத்தில் 2 ஜேப்படி திருடர்கள் கைது!

அதிரை நியூஸ்: டிச.07
அமீரகம், அபுதாபியில் 2 ஜேப்படி திருடர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் யார் மீதாவது ஒருவன் எச்சிலை துப்புவான். எச்சில் தன் மேல்பட்டதால் கவனம் சிதறும் ஆட்களுடைய பாக்கெட்டுகளிலிருந்து அவர்களின் இன்னொருவன் பர்ஸ், பணம் உள்ளிட்ட பொருட்களை அபேஸ் செய்து கொண்டு சென்றுவிடுவான்.

இதுபோல் ஒருவரிடமிருந்து திருட முயன்ற சம்பவம் குறித்து புகாரைப் பெற்ற அபுதாபி போலீஸார் கூடுதல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி 2 ஆப்பிரிக்க நாட்டவர்களை கைது செய்தனர்.

இதேபோல், வங்கிகளிலிருந்து பணத்துடன் வரும் ஆட்களின் முகத்தில் 'ஸ்ப்ரே' அடித்து கொள்ளையடிக்கும் நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அபுதாபி போலீஸ் தெரிவித்துள்ளதுடன் யாரும் பாக்கெட்டுகளில் அதிகமாக பணத்தை எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...