Pages

Tuesday, December 12, 2017

தஞ்சை மாவட்டத்தை வரும் டிச.31 க்குள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக உருவாக்க திட்டம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில்  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 22 ஊராட்சி ஒன்றியங்களில்  நடைபெற்று வரும் தனி நபர் இல்ல கழிப்பறை, பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம், சாலை பணிகள், குளங்கள் தூர் வாருதல் போன்ற வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் தொடர்பாக அனைத்து  வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (12.12.2017) செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகின்ற 31.12.2017க்குள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ளது. பொது மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நமது மாவட்டத்தில் 1,20,804 தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அரசு மானிய உதவித் தொகை வழங்கி வருகிறது.  இப்பணியை 20 நாட்களுக்குள் திட்டமிட்டு தனி நபர் இல்ல கழிப்பறையை கட்டி முடிக்க வேண்டும்.

தனி நபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கும் முதலமைச்சரின் பசுமை வீடு கட்டுவதற்கும், பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கும் வசதியாக நமது மாவட்டத்தில் மாட்டு வண்டி மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளது. மணல் காரணம் காட்டி காலம் தாழ்தாமல் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும், உதவி பொறியாளர்களும் பயனாளிகளை நேரில் சந்தித்து கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பதற்கு அறிவுறுத்த வேண்டும்.

பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பசுமை வீட்டிற்கும் ரூ.2.10 இலட்சம் தமிழக அரசு வழங்கி வருகிறது. நமது மாவட்டத்தில் 877 வீடுகள் கட்டி முடிக்க வேண்டும்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் 6252 வீடுகள் விரைந்து கட்டி முடிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.அண்ணாதுரைää இ.ஆ.ப.ää அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், ஊராட்சி ஒன்றியங்களில் சாலை பணிகள் தரமானதாகவும்ää விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குளங்களில் தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும்.  கரையின் இருபுறங்களிலும் பனை மரங்கள் மற்றும் மூங்கில் மரங்கள் போன்ற மரங்களை நட்டு வளர்ப்பதால் மண் அரிப்பு ஏற்படாமல் கரையை பாதுகாக்க முடியும். தனி நபர் இல்ல கழிப்பறை விரைவாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.  பொது மக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், செயற்பொறியாளர் சீனிவாசன் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...