Pages

Sunday, December 10, 2017

5 கி.மீ. நடைப் போட்டி: M.M.S சகாபுதீன் மாநில அளவில் சாதனை!

சாதனையாளர் M.M.S சகாபுதின்
அதிராம்பட்டினம், டிச.10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் மயிலாடுதுறை  சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் எம்.எம்.எஸ் அபுல் ஹசன். இவரது மகன் எம்.எம்.எஸ் சகாபுதீன் (வயது60). வழக்குரைஞர்.

இந்நிலையில், தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில், 36 ஆம் ஆண்டு மாநில அளவிலான நடைப் போட்டி, கரூரில் டிச.8, 9,10 ஆகிய தினங்களில் நடைபெற்றது. இதில், 5 கி.மீ. பிரிவில் பங்கேற்ற எம்.எம்.எஸ் சகாபுதீன் 34 நிமிடம், 11 விநாடிகளில் இலக்கை எட்டி, முதல் இடம் பிடித்து 'மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்' பட்டத்தை தட்டிச்சென்றார்.

சாதனையாளர் எம்.எம்.எஸ் சகாபுதினுக்கு, தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் தேவாரம், பதக்கம், பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து சாதனையாளர் எம்.எம்.எஸ் சகாபுதின் கூறியது;
'கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடை பயிற்சியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறேன். பட்டுக்கோட்டை நடை பயிற்சியாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். இச்சங்கம் சார்பில், கடந்த 2 ஆண்டுகளாக நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றேன். மாநில அளவில் கரூரில் நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது இதுதான் முதல் தடவை. வரும் ஆண்டு பெங்களூரில் நடைபெறும் தேசிய அளவிலான நடைப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெறுவதுதான் எனது அடுத்த இலக்கு' என்றார்.

2 comments:

  1. வேக நடை போட்டியில் வெற்றி நடைபோட்ட எம்.எம்.எஸ் சகாபுதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தடைகள் தகர்த்தெறிந்து மேலும் மாஸ்டர்ஸ் பெற வேண்டும் - ஊருக்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தன் வாழ்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...