Pages

Monday, December 4, 2017

ஏர் இந்தியா விமானப் பயணிகளுக்கு 50 கிலோ லக்கேஜ் ஆஃபர் (முழு விவரம்)

அதிரை நியூஸ்: டிச.04
துபை, ஷார்ஜா மற்றும் அபுதாபி விமான நிலையங்களிலிருந்து இந்திய நகரங்களான சென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் கொச்சி செல்லும் ஏர் இந்தியா விமானங்களில் 2017 டிசம்பர் 10 ஆம் தேதி வரை 50 கிலோ லக்கேஜ் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர்.

இந்த சலுகை ஏற்கனவே அக்டோபர் மாதம் 25 தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் துவங்கி டிசம்பர் 10 வரை பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

அதேவேளை ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி, 1 லக்கேஜ்ஜின் எடை 32 கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாது. இந்த சலுகை பிஸ்னஸ் மற்றும் எகானமி வகுப்பு பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

அபுதாபியிலிருந்து மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் இந்த சலுகையை செப்டம்பர் 16 தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கும் கூடுதல் சலுகையாக டிச. 10 வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேவேளை ஷார்ஜாவிலிருந்து கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் செல்லும் பிஸ்னஸ் வகுப்பு பயணிகள் மட்டும் இந்த சலுகையை அனுபவிக்கலாம்.

துபை – டெல்லி எகானமி வகுப்பு பயணிகள் மற்றும் ஷார்ஜா – கோழிக்கோடு, திருவனந்தபுரம் எகானமி வகுப்பு பயணிகள் இதே காலகட்டத்தில் 40 கிலோ லக்கேஜ் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

ரியாத், தம்மாம், மஸ்கட் மற்றும் குவைத்திலிருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களிலும் இதுபோன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...