Pages

Saturday, December 2, 2017

தஞ்சை டிச.6 கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு 30 வாகனங்களில் செல்லவும், 8 இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடத்தவும் தீர்மானம்!

அதிராம்பட்டினம், டிச.02
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், பாபர் மஸ்ஜீத் இடிப்பு தினமான டிசம்பர் 6 ஐ பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அறிவித்து, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், தஞ்சை ரயில் நிலையம் அருகில், அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் தமுமுக  கலந்தாலோசனைக் கூட்டம் இன்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, தமுமுக அதிரை பேரூர் தலைவர் எம். சாகுல் ஹமீது தலைமை வகித்தார். தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா, துணைச்செயலர் எஸ்.எஸ் சேக்காதியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டிச.6 பயங்கரவாத எதிர்ப்பு தினத்தையொட்டி, நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை அழைக்கும் விதத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் வாகனப் பிரச்சாரம், பிளக்ஸ் பேனர்கள், வால்போஸ்டர், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட விளம்பரப் பணிகள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன. மேலும், கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தமுமுக - மமக தோழமை கட்சிகள், சமுதாய அமைப்புகள், ஜமாத்தார்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ்கள் வழங்கியது குறித்து பேசப்பட்டது.

மாநிலப் பேச்சாளர் பழனி பாருக் கலந்துகொள்ளும் தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தினை அதிராம்பட்டினத்தில், செக்கடி மேடு, மேலத்தெரு, தக்வா பள்ளிவாசல் முக்கம், கடற்கரைத் தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, சுரைக்கா கொல்லை, பிலால் நகர், எம்.எஸ்,எம் நகர், பேருந்து நிலையம் ஆகிய 8 இடங்களில் நாளை டிச.3 மற்றும் டிச.4 ஆகிய 2 நாட்கள் நடத்துவது எனவும், தஞ்சை போராட்டத்திற்கு சுமார் 30 வாகனங்களில் அனைவரையும் அழைத்துச் செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக, தமுமுக அதிரை பேரூர் செயலர் எம்.ஆர் கமாலுத்தீன் வரவேற்றுப் பேசினார். முடிவில் மமக செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது நன்றி கூறினார். இக்கூட்டத்தில், தமுமுக/மமக அதிரை பேரூர் பொருளாளர் முகமது யூசுப் உட்பட தமுமுக / மமகவினர் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

1 comment:

  1. உ.பி., ஷியா வக்பு வாரியத் தலைவர், வாசிம் ரிஸ்வி கூறியதாக செய்திவந்தது அதாவது அயோத்தியில் உள்ள நிலத்தை ஹிந்துக்களுக்கு ஒப்படைத்து அங்கு ராமர் கோவில் கட்டலாம். அதே நேரத்தில், லக்னோவின் ஹுசைனாபாத் பகுதியில், மசூதி அமைக்க வேண்டும். இதற்கு மாநில அரசு, ஒரு ஏக்கர் நிலத்தை அளிக்க வேண்டும். இந்த சமரசம் தொடர்பான வரைவு அறிக்கையை, நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். இவ்வாறு கூறியதாக அச்செய்தி வந்தது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் அங்கே சம்பந்தப்பட்டவர்கள் தங்களது கோரிக்கையை வைக்கும்போது இவர்கள் தஞ்சையில் ஓன்று கூடுவதால் ஏதாவது நிகழுமா? ஷியா வக்பு வாரியத் தலைவர், வாசிம் ரிஸ்வி பார்த்து நல்ல அறிவுரை சொல்ல ஏற்பாடு பண்ணுங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...