Pages

Sunday, December 3, 2017

அதிராம்பட்டினத்தில் 6 இடங்களில் தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச. 03
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், பாபர் மஸ்ஜீத் இடிப்பு தினமான டிசம்பர் 6 ஐ பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அறிவித்து, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், தஞ்சை ரயில் நிலையம் அருகில், அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் தமுமுக சார்பில், தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு, தரகர் தெரு, எம்.எஸ்.எம் நகர், பிலால் நகர், பெரிய ஜும்மா பள்ளி, மேலத்தெரு எம்.எம்.எஸ் வாடி அருகில் ஆகிய 6 இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டங்களுக்கு, தமுமுக அதிரை பேரூர் தலைவர் எம்.சாகுல்ஹமீது தலைமை வகித்தார். கூட்டத்தில், அவ்வமைப்பின் மாநிலப் பேச்சாளர் பழனி பாருக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். இதில் தமுமுகவினர் பலர் கலந்துகொண்டனர். மேலும், இதன் தொடர்ச்சியாக அதிரையில் செக்கடி மேடு, பழைய போஸ்ட் ஆபீஸ், சுரைக்கா கொல்லை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை பிரச்சராக் கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...