Pages

Monday, December 11, 2017

சிஎம்பி லேன் கழிவு நீர் வடிகால் ~ மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

அதிராம்பட்டினம், டிச.11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எல்.எம்.எஸ் சைஃபுதீன். சமூக ஆர்வலர். அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்ட சி.எம்.பி லேன் பகுதி குடியிருப்பு கழிவு நீர் வடிகாலை சீர் செய்து தரக்கோரி, மாவட்ட ஆட்சியர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அவர்களிடம் இன்று திங்கட்கிழமை காலை புகார் மனுவை அளித்தார்.

புகார் மனுவில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்ட சிஎம்பி லேன் பகுதி குடியிருப்பு கழிவு நீர் வெளியேற, கடந்த 2016 ஆம் ஆண்டு அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதி ரூ.8 லட்சம் மதிப்பீட்டில், 800 மீட்டர் நீளத்தில் குழாய்கள் அமைத்து கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில்,  வடிகாலில் இருந்து கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஆங்காங்கே தேங்கிக் காணப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், இந்த சாலை வழியே கடந்துசெல்லும் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உடனடியாக கழிவு நீர் வடிகாலை ஆய்வு செய்து, குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரை, வடிகாலில் சீராகச் செல்வதற்கான ஏற்பாடு செய்து தரவேண்டுமென புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...