Pages

Wednesday, December 13, 2017

நிரம்பும் தருவாயில் எழில்மிகு செக்கடி குளம் (படங்கள்)

அதிராம்பட்டினம் டிச.13
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியின் 8 ஊரணிகளுக்கு அதிரை நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வறட்சி காலங்களில் நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அதிரை பேரூராட்சி பொது நிதி ₹ 43.50 லட்சம் மதிப்பீட்டில் கடந்த வருடம் பணிகள் நிறைவடைந்து, இதையடுத்து, ஆலடி குளம், செக்கடி குளம், புள்ளை குளம் உள்ளிட்ட குளங்களுக்கு நீர் இறைக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அண்மையில் பெய்த தொடர் மழையால் நசுவினி ஆற்றின் ஓடையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், பம்பிங் மூலம் நசுவினி ஆற்றின் ஓடையில் இருந்து  நீர் இறைக்கும் பணி கடந்த டிச.4 ந் தேதி முதல் தொடங்கியது. இதில், சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள செக்கடி குளத்திற்கு பம்பிங் நீர் தொடர் வரத்தை அடுத்து செக்கடி குளத்தின் நீர் மட்டம் உயர்ந்து நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் இப்பகுதியினர் மகிழ்ச்சியடைந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...